இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 202.80 அல்லது 0.25% புள்ளிகள் சரிந்து 82,352.64 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 81.15 அல்லது 0.32% புள்ளிகள் சரிந்து 25,198.70 ஆக வர்த்தகமாகியது.


வர்த்தகம் தொடங்கியதில் இருந்து சென்செக்ஸ் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் குறைந்துள்ளது. 1852 பங்குகள் லாபத்துடனும் 1935 பங்குகள் சரிவுடனும் 90 பங்குகள் மாற்றமின்றி இருந்தது. உள்ளுர் சந்தை சரிவுடன் இருந்தது. உலக அளவில் சந்தை சற்றே சரிவுடன் காணப்பட்டது. 


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.97 ஆக இருந்தது. மிட்கேப் நிறுவனங்களின் இன்டெக்ஸ் 74 புள்ளிகள் குறைந்து 59,224 ஆக இருந்தது. பெயிண்ட் நிறுவனங்கள் 2% அதிகரித்தது. ஐ.டி. துறை பங்குகள் 3% சரிந்தது. அமெரிக்க பொருளாதார நிலை குறித்து சந்தேக நிலை தொடர்வதால் சந்தை சரிவில் உள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவு எண்ணெய் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஃபினான்ஸ் நிறுவனம் பங்குகளின் விலை சற்று உயர்ந்திருந்தது.


லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:


எசியன் பெயிண்ட்ஸ், க்ரேசியம், ஹெச்.யு.எல்., அப்பல்லோ மருத்துவமனை, சன் ஃபார்மா, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹீரோ மோட்டர்கார்ப், டிவிஸ் லேப்ஸ், பி.பி.சி.எல்., ரிலையன்ஸ், பஜாஜ் ஃபினான்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், பிரிட்டானியா, நெஸ்லே, பாரதி ஏர்டெல், டெக் மஹிந்திரா, ஹெச்.டி.எஃப்.சி. லைஃப் ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது. 


விப்ரோ, கோல் இந்தியா, ஓ.என்.ஜி.சி., எம்&எம், எல்.டி.ஐ. மைண்ட்ரீ, ஆக்சிஸ் வங்கி, லார்சன், எஸ்.பி.ஐ., டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், இன்ஃபோசிஸ், ஐ.சி.ஐ.சி.வங்கி., எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஸ்ரீராம் ஃபினான்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், பஜாஜ் ஃபினான்ஸ், டி.சி.எஸ்., பஜாஜ் ஆட்டொ, ஈச்சர் மோட்டர்ஸ், டாடா ஸ்டீல், ஐ.டி.சி., பவர்கிரிட் கார்ப், அதானி போர்ட்ஸ், மாருதி சுசூகி, டாடா மோட்டர்ஸ், டைட்டன் கம்பெனி,என்.டி.பி.சி., இந்தஸ்லேண்ட் வங்கி, சிப்ளா அகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.