கடந்த சில வருடங்களில், UPI மூலம் பணபரிவர்த்தனை செய்வது,அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இதற்கு முன்பு, பணத்தை ஒரு வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணக்கிற்கு மாற்ற வேண்டும் எனில் வங்கிக்குச் செல்ல வேண்டும் அல்லது ஏடிஎம் இயந்திரம் மூலமாகவும் மாற்றம் செய்யலாம்.
யுபிஐ
ஆனால், தற்போது யுபிஐ மூலமாக கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி எளிமையாக பரிமாற்ற செய்யலாம். சிறு கடைகள் முதல் மிகப்பெரிய கடைகள் வரை யுபிஐ பரிவர்த்தனையின் செயல்பாடு பெரும்பாலும் நடைமுறைக்கு வந்துவிட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
யுபிஐ மூலமாக பணத்தை டெபாசிட் செய்யும் வசதியை கொண்டுவரவுள்ளது.
தற்போதுவரை, கையில் இருக்கும் பணத்தை ( ரூபாய் நோட்டுகள் ) வங்கியில் வைப்பாக வைக்க வேண்டும் என்றால், வங்கிக்குச் சென்று, அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து பணத்தை செலுத்த வேண்டும். மற்றொரு முறையாக ஏடிஎம் இயந்திரங்களில் ( பணம் செலுத்தும் வசதி உள்ள இயந்திரங்கள் ) ரூபாய் நோட்டுகளை அனுப்பி, வங்கி கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம்.
புதிய அறிவிப்பு:
இந்நிலையில், இன்று இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் பணவியல் கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், பணம் செலுத்தும் வசதியையும் அறிமுகப்படுத்த பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து, UPI இன் பயன்பாடு பணம் செலுத்துவதற்கு மட்டுமன்றி. இப்போது, நீங்கள் UPI-ஐப் பயன்படுத்தி ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்கலாம். உங்கள் வாழ்க்கையை இன்னும் வசதியாக மாற்ற, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இப்போது ஏடிஎம்களில் UPI மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதியை செயல்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் விரைவில் ஏடிஎம்களில் உள்ள பண வைப்பு இயந்திரங்களில் பணத்தை டெபாசிட் செய்யலாம். இந்த நடைமுறை சில தினங்களில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு, கூடுதலான வசதிகளை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது