நிலையற்ற பொருளாதாரத்தில் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பாதுகாக்க வேண்டும்:



இன்றைய உலகில், பொருளாதார ஸ்திரத்தன்மையை எளிதில் விளக்கிவிட முடியாது. அமெரிக்காவில் நிலவி வரும் மந்தநிலை, சமீபத்தில் ஜப்பானிய பங்குச் சந்தையில் ஏற்பட்ட குழப்பம், ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் போன்ற உலகளாவிய நிகழ்வுகள் நிலையற்ற சந்தைகளுக்கு பங்களித்துள்ளன. இந்த நிச்சயமற்ற தன்மைகள் இயற்கையாகவே உங்கள் செல்வத்தைப் பாதுகாப்பது பற்றிய கவலைகளை எழுப்புகின்றன. குறிப்பாக 38 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள், தங்கள் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.


நிச்சயமற்ற காலங்களில் ஸ்மார்ட்டான முதலீட்டு உத்திகள்:


பொருளாதார ஸ்திரமின்மையின்போது, முதலீட்டிற்கு நன்கு சிந்திக்கும் அணுகுமுறையைக் கொண்டிருப்பது முக்கியம். உங்கள் இடர் சகிப்புத்தன்மையை மதிப்பிடுவது, உங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும்.


உங்கள் பங்குகள், வளர்ச்சிக்கான திறவுகோலாக இருக்கும் அதே சமயத்தில், சந்தை வீழ்ச்சியின் போது அவை உங்களை ஆபத்தில் ஆழ்த்துகின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில், HDFC Life Click 2 Invest போன்ற யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டங்கள் (ULIPs) வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை சமநிலைப்படுத்த சிறந்த தேர்வாக இருக்கும்.


ULIP-க்கள் மூலதனச் சந்தையுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், அவை நீண்ட கால பாதுகாப்பை வழங்குகின்றன. கடன் மற்றும் பங்குகளின் கலவையில் முதலீடு செய்வதன் மூலம், போர்ட்ஃபோலியோ பல்வகைப்படுத்தல் மூலம் ஆபத்தை குறைக்கும் அதே வேளையில் சந்தை வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள ULIPக்கள் உங்களை அனுமதிக்கின்றன.


உலகளாவிய சந்தையின் ஏற்ற இறக்கத்தில் நீந்தி செல்லுதல்:


அமெரிக்க மந்தநிலையால் எழும் கவலைகள்:


அமெரிக்காவில் மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள், உலகளாவிய சந்தைகளில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. குறுகிய கால சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் எந்த வித திட்டமிடுதலும் இன்றி செயல்படுவதற்குப் பதிலாக, முதலீடு செய்வதன் நீண்ட கால நன்மைகளைக் கருத்தில் கொள்ளுங்கள்.


ULIP-க்கள் போன்ற இன்சூரன்ஸ் திட்டங்கள், உங்களுக்கு நிலையான அணுகுமுறையை பராமரிக்க உதவுகின்றன. தற்காலிக சந்தை சரிவுகள் இருந்தாலும், உங்கள் முதலீடுகள் வளர அனுமதிக்கிறது.


ஜப்பானிய பங்குச் சந்தை வீழ்ச்சி:


ஜப்பானிய பங்குச் சந்தையின் சமீபத்திய ஏற்ற இறக்கம், உலகப் பொருளாதாரம் எவ்வளவு கணிக்க முடியாதது என்பதை எடுத்துக்காட்டுகிறது.


ஒரு திட்டத்தில் இருந்து மற்றொரு திட்டத்திற்கு மாறுவதற்கான நெகிழ்வுத்தன்மையை HDFC Life Click 2 Invest போன்ற யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டங்கள் வழங்குகின்றன. தேவைப்படும் போது உங்கள் முதலீடுகளை இன்னும் நிலையான நிதிகளுக்கு மறு ஒதுக்கீடு செய்ய அனுமதிக்கிறது. இது, ஆபத்தை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.


புவிசார் அரசியல் பதட்டங்கள்:


மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பதட்டங்கள், உலக சந்தைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன.


பன்முகப்படுத்தப்பட்ட யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம், வெவ்வேறு நிதி சொத்துகளில் உங்களின் முதலீடுகளை விரிவுப்படுத்தலாம். இது உங்கள் போர்ட்ஃபோலியோவில் இத்தகைய புவிசார் அரசியல் அபாயங்களின் தாக்கத்தைக் குறைக்க உதவுகிறது.


நிச்சயமற்ற காலங்களில் ULIP-க்களின் நன்மைகள்:


வளர்ச்சி திறன் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டதுதான் யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டங்கள் (ULIP). சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும், ஓய்வு அல்லது உங்கள் குழந்தையின் கல்வி போன்ற நீண்ட கால நிதி இலக்குகளை நோக்கி உழைக்க ULIP-க்கள் உங்களுக்கு உதவும்.


முக்கியமாக, HDFC Life Click 2 Invest திட்டத்துடன், நீங்கள் முதிர்வு நன்மைக்கான உத்தரவாதத்தையும் பெற்றுள்ளீர்கள். அதாவது, நிலையற்ற சந்தைகளில் கூட பாலிசி காலத்தின் முடிவில் நீங்கள் குறிப்பிட்ட நிதியை பெறுவீர்கள்.


HDFC Life Click 2 Invest திட்டத்தின் முக்கிய நன்மைகள்:


எச்டிஎஃப்சி லைஃப் கிளிக் 2 முதலீடு, உங்கள் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த தேர்வாக இருக்கக் காரணம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.



  • 14 நிதி விருப்பத்தேர்வுகள்: நீங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பாதவராக இருந்தாலும் சரி, சந்தையின் ஏற்ற இறக்கத்தை எதிர்கொள்ள தயாராக இருந்தாலும் சரி, உங்கள் முதலீட்டு விருப்பங்களுக்கு ஏற்ப 14 வெவ்வேறு ஃபண்டுகளில் இருந்து தேர்ந்தெடுக்கலாம்.

  • நிதி பெறுவதில் நெகிழ்வுத்தன்மை: உங்களின் நிதித் தேவைகளின் அடிப்படையில், திட்டம் முதிர்ச்சி அடைந்த பின், குறிப்பிட்ட தவணைகளிலோ அல்லது மொத்தமாகவோ நிதி பெறுவதற்கான ஆப்ஷனை தேர்வுசெய்யஸாம்.

  • வரிச் சலுகைகள்: நடைமுறையில் உள்ள வரிச் சட்டங்களைப் பொறுத்து, நீங்கள் வரிச் சலுகைகளுக்குத் தகுதியுடையவராக இருக்கலாம். இது, செல்வத்தை கட்டியெழுப்பும் கருவியாக யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டங்கள் இருப்பதை உணர்த்துகிறது.


முடிவு:


உலகளாவிய நிச்சயமற்ற காலங்களில், உங்கள் செல்வத்தைப் பாதுகாப்பதில் விவேகமான அணுகுமுறையை மேற்கொள்வது அவசியம். HDFC Life Click 2 Invest போன்ற ULIP திட்டங்கள், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பை சமநிலைப்படுத்துவதற்கான உத்தியை வழங்குகின்றன.


நீண்ட கால கவனம், நெகிழ்வுத்தன்மை மற்றும் பாதுகாப்புடன், இந்தத் திட்டம் பொருளாதாரப் பெரும் பிரச்னைகளை எதிர்கொள்ள உங்களை அனுமதிக்கிறது. அதே நேரத்தில் நீங்கள் கடினமாக சம்பாதித்த பணம் பாதுகாப்பாக இருப்பதையும், உங்கள் எதிர்காலத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதையும் உறுதி செய்கிறது.



 


(பொறுப்புதுறப்பு): இது, விளம்பர கட்டுரையாகும். இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை ABP குழுமம் ஆதரிக்கவில்லை. மேற்கூறிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், அறிவிப்புகள், பிரகடனங்கள், உறுதிமொழிகள், கூறப்பட்ட/சிறப்பிடப்பட்டவை போன்றவற்றிற்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டோம். கூறப்பட்ட கட்டுரையில். அதன்படி, பார்வையாளர்கள் கவனமாக முடிவுகளை எடுக்க அறிவுறுத்துகிறோம்.