கோடிக்கணக்கில் இழப்பு
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில் தற்போது 80 ஆயிரம் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன . இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதனால் 14,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, போர்டு நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தது. ஃபோர்டு நிறுவனத்தின் மூடப்பட்ட குஜராத் தொழிற்சாலையை, டாடா குழுமம் 725.7 கோடி ரூபாய்க்கு ,கடந்த ஜனவரி மாதம் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது .
சென்னை மறைமலைநகர் உற்பத்தி ஆலை ( ford chennai factory )
சென்னை ஃபோர்டு தொழிற்சாலை சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வருடத்திற்கு இரண்டு லட்சம் வாகனங்களையும், 3.4 லட்சம் இன்ஜின்களையும் தயாரிக்கும் திறன் கொண்டது. இந்த நிலையில் சென்னை தொழிற்சாலை, கடந்த வருடம் ஜூலை மாதம் 31-ஆம் தேதி தனது உற்பத்தியை முழுமையாக நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, செட்டில்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சில ஊழியர்கள் இந்த நிறுவனத்தை , வேறு யாராவது வாங்கினால், அப்பொழுது தங்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை வாங்க போவது யார் ? ( ford chennai plant takeover )
JSW குருப் இந்தியாவில் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது. JSW குரூப் இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு புனே அருகில் இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையை , வாங்க முயற்சி செய்து 2019ல் இத்திட்டத்தை கைவிட்டது. இந்த நிலையில் சென்னை ஃபோர்டு தொழிற்சாலை வாங்க முயற்சி செய்து வருகிறது. சென்னை தொழிற்சாலையை கைப்பற்ற JSW குரூப் மற்றும் அமெரிக்காவின் ஃபோர்ட் உயர்மட்ட நிர்வாகமும் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் JSW குரூப், எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடரும் பேச்சு வார்த்தை ( JSW Group )
JSW குரூப் இதுவரையில் ஆட்டோமொபைல் துறையில் கால் வைக்காத நிறுவனம் இல்லாத காரணத்தால், முன் அனுபவம் உள்ள நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக JSW குரூப் கடந்த 2 மாதமாக சீனாவின் SAIC மோட்டார் கார்ப் கட்டுப்பாட்டில் இருக்கும் , எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தில் 48 சதவீத பங்குகளை கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் எனவும், பேச்சு வார்த்தைகள் நல்ல நிலையில் சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. மீண்டும் சென்னை உற்பத்தியை துவங்கினால் பல்லாயிரம் நபர்களுக்கு, நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Car loan Information:
Calculate Car Loan EMI