சிறிய ஜவுளிப்  பூங்கா (Mini Textile Park)


தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படும். இவ்வாறு அமையவுள்ள ஜவுளிப் பூங்கா குறைந்தபட்சம் 3  தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2  ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும்.


மானியத்தை பெறத் தகுதி


  இத்தகைய சிறிய ஜவுளிப்  பூங்காவின் ( Mini Textile Park ) அமைப்பு பின்வரும் உட்பிரிவுகளைக்கொண்டதாக இருக்கும்.



  1.  i) நிலம்

  2.  ii) உட்கட்டமைப்பு வசதிகள் (சாலை வசதி, சுற்றுசுவர், கழிவு நீர் வாய்க்கால் அமைத்தல், நீர் விநியோகம், தெரு விளக்கு அமைத்தல், மின்சார வசதி ( including captive power plant ) மற்றும் கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையம், தொலை தொடர்பு வசதி போன்றவைகள்.


iii) ஆய்வுக்கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருட்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளர்கள் விடுதி, அலுவலகம் மற்றும் இதர இனங்கள்.



  1. iv) உற்பத்தி தொடர்பான தொழிற்கூடங்கள்.

  2. v) இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள்.


சிறிய ஜவுளிப் பூங்காவிற்கான திட்ட மதிப்பீடு என்பது மேற்குறிப்பிட்ட 2, 3  மற்றும் 4  இனங்கள் ஆகும். எனவே, இம்மூன்று இனங்கள் மட்டுமே அரசின் மானியத்தை பெறத் தகுதியான முதலீடாகக் கருதப்படும்.


விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது


மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும், தகவல்களுக்கு மண்டல துணை இயக்குநர், துணிநூல் துறை, 1A-2/1, சங்ககிரி மெயின் ரோடு, குகை, சேலம்- 636 006, தொலைபேசி எண்- 0427-2913006  அலுவலகத்தை அணுகவும்.   இப்பொருள் தொடர்பான  ஆலோசனைக்கூட்டம்  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்  கூட்டரங்கில் 18.05.2023 அன்று  மாலை 6.00 மணியளவில்  நடைபெறுவதால் தொழில் முனைவோர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் , இ.ஆ.ப., கேட்டுக்கொண்டுள்ளார்.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண