இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து ஆறாவது வாரமாக ஏற்றத்துடன் வர்த்தகமாகியது. இன்றைய வர்த்தக நேர முடிவில், பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி புதிய வரலாறு படைக்க உள்ளது.


 இன்னும் சில நாட்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தை இந்த வாரமும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. நிஃப்டி முதன்முறையாக 24,600 புள்ளிகளில் கடந்து புதிய உச்சம் தொட்டது. சென்செக்ஸ் 80,800 புள்ளிகளில் வர்த்தகமாகிய நிலையில், 81 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டு வரலாற்று உயர்வைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு உயர்ந்திருந்தது. குறிப்பாக, டாடா கன்சல்ட்ன்சி முதல் காலாண்டு லாபத்தை அதிகத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


12 மணி நேர அளவில், சென்செக்ஸ் 238 புள்ளிகள் அதிகரித்து 80,758.32 ஆகவும் நிஃப்டி 99.70  அதிகரித்து 24,601.90 புள்ளிகளாக வர்த்தகமானது. 1,832 பங்குகள் லாபத்துடனும் 1,572 பங்குகள் சரிவுடனும் 112 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின. 


தொழில்நுட்ப நிறுவனங்களாக இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல். டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்டவை நிஃப்டியில் ஏற்றம் கண்டன. ஸ்மால்கேப்,பி.எஸ்.இ. மிட்கேப் இரண்டும் முறையே 0.3%, 0.7% ஆக இருந்தது. ஆட்டோமொபைல், ஃபார்மா, பொதுத்துறை வங்கிகள் அகிய துறைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின. 


வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 145.51 அல்லது 0.18 % புள்ளிகள் உயர்ந்து 80,664.86 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 84.55 அல்லது 0.35% புள்ளிகள் உயர்ந்து 24,586.70 ஆக வர்த்தகமானது.


லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:


ஓன்.என்.ஜி.சி., எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஸ்ரீராம் ஃபினான்ஸ், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், பஜாஜ் ஆட்டோ, எஸ்.பி.ஐ., என்.டி.பி.சி., பஜாஜ் ஆட்டோ, எஸ்.பி.ஐ., என்.டி.பி.சி., அல்ட்ராடெக் சிமெண்ட், அப்பல்லோ மருத்துவமனை, ஹிண்டால்கோ, ஹீரோ மோட்டர்கார்ப், எம்&எம்., ஐ.டி.சி., பஜாஜ் ஃபினான்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ்,டாடா மோட்டர்ஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, சிப்ளா, ஹெச்.டி.எல்., டெக், மாருதி சுசூகி,கோடாக் மஹிந்திரா வங்கி, சன் ஃபார்மா, அதானி போர்ட்ஸ், பிரிட்டானியா, ஹெச்.டி.எஃப்.சி. லைஃப், பி.பி.சி.எல்., பஜாஜ் ஃபின்சர்வ, பவர்கிரிட் கார்ப், லார்சன், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின. 


எல்.டி.ஐ. மைண்ட்ரீ, ஏசியன் பெயிண்ட்ஸ், க்ரேசியம், டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா, டெக் மஹிந்திரா, டி.சி.எஸ்.,டாடா கான்ஸ் ப்ராட், ஜெ.எஸ்.டபுள்யு., இன்ஃபோசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, டைட்டன் கம்பெனி, டிவிஸ் லேப்ஸ், நெஸ்லே, விர்ரோ, ஹெட்.யு.எல்., ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, பாரதி ஏர்டெல், ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.