விரிவாக்கப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நிறுவனம் தனது 300-வது உலகளாவிய ஷோரூமை அமெரிக்காவின் டல்லஸ் நகரில் திறந்துள்ளது.


இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், "10 நாடுகளில் 300 ஷோரூம்கள் என்கிற தனது வலுவான நெட்வொர்க்கால் உலகின் 6ஆவது மாபெரும் சில்லறை ஆபரண வர்த்தக நிறுவனமாக விளங்கும் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸின் 300வது உலகளாவிய ஷோரூமின் திறப்பு விழாவானது அமெரிக்காவின் டல்லஸ் நகரில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.


காலின் நகரின் கவுண்டி கமிஷனரான சூஸன் ஃப்ளெட்சர் மற்றும் டெக்சாஸ் நகரின் மேயர் ஜெஃப் செனே ஆகிய இருவரும் மலபார் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் (சர்வதேச செயல்பாடுகள்) ஷாம்லால் அகமது முன்னிலையில் ஷோருமைத் திறந்து வைத்தனர். 


மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி. அகமது, துணைத்தலைவர் கே.பி. அப்துல் சலாம், இந்திய செயல்பாடுகளின் நிர்வாக இயக்குனர் ஓ. அஷர் மற்றும் குழும நிர்வாக இயக்குனர் & B2B ஏ.கே. நிஷாத் உள்ளிட்ட பலரும், குழும உறுப்பினர்களும், நலம் விரும்பிகளும் பிற விருந்தாளிகளும் காணொலிக் காட்சி மூலம் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


"அமெரிக்காவின் டல்லஸ் நகரில் 300வது ஷோரூமைத் திறக்கும் இந்த நிகழ்வு எங்களுக்கெல்லம் பெருமை தரும் ஒரு தருணமாகும். இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு நகரில் ஒரு சிறிய ஷோரூமுடன் துவங்கி 30 ஆண்டுகளுக்குள் உலகெங்கிலும் 10 நாடுகளில் 300 ஷோரூம்கள் என்ற அளவில் வலுவானதொரு சில்லறை விற்பனை நிறுவனமாக நாங்கள் உருவெடுத்துள்ளோம். 


வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், ஊழியர்கள், எம்மோடு தொடர்புடைய மற்றும் பலருடைய உதவியால் தான் இது சாத்தியமாயிற்று. ஏற்கனவே எமது விற்பனை மையங்கள் துடிப்புடன் இயங்கிவரும் பிராந்தியங்களில் எமது வலுவான செயல்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்வோம். 


மேலும், எமது பல்வேறான பொருட்கள், சேவைகள் மற்றும் உத்தரவாதங்களுடன் புதுப்புது சந்தைகளில் நுழையும் திட்டமும் வைத்துள்ளோம். எமது பிராண்டை மக்கள் ஏற்று அதற்குத் தரும் பேராதரவுதான் உலகின் ‘நம்பர் 1’ ஆபரண சில்லறை வர்த்தக நிறுவனமாக வேண்டும் என்கிற இலக்கை நோக்கிப் பணிபுரியவும் விரிவாக்கம் செய்யவும் தேவையான பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது,” என்கிறார் மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி. அகமது. 


உலகளாவிய சில்லறை ஷோரூம்கள் விரிவாக்கத் திட்டத்திற்கு உதவும் விதமாக தனது உற்பத்தித் திறன்களை இன்னும் வலுவாக்கும் எண்ணமும் குழுமத்திற்கு உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


தனது விரிவாக்கத் திட்ட்த்தை இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் அமல்படுத்த உள்ளது; இத்திட்டத்தில் போபால், சூரத் உள்ளிட்ட பெருநகரங்கள் மட்டுமின்றி முக்கியமான 2ஆம் அடுக்கு சந்தைகளான இரிட்டி, அனகாபள்ளி, நான்டெட், வாபி, விழியநகரம் தனது விரிவாக்கத் திட்ட்த்தை இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் அமல்படுத்த உள்ளது; 


இத்திட்டத்தில் போபால், சூரத் உள்ளிட்ட பெருநகரங்கள் மட்டுமின்றி முக்கியமான 2ஆம் அடுக்கு சந்தைகளான இரிட்டி, அனகாபள்ளி, நான்டெட், வாபி, விழியநகரம் ஆகியவையும் அடங்கும். தனது உலகளாவிய விரிவாக்கல் திட்டத்தின் கீழ் இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, எகிப்து, கனடா, துருக்கி மற்றும் தென்னாப்பிரிக்காவில் ஸ்டோர்கள் திறக்க மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 


இந்த எதிர்கால விரிவாக்கல் திட்டத்தினால் சில்லறை வர்த்தகம், உற்பத்தித் துறை, தொழில்நுட்பம் நிர்வாகம் ஆகிய துறைகளில் கிட்டத்தட்ட 6000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது ஆம்னி சேனல் முயற்சிக்கு மெருகூட்டும் விதமாக மைக்ரோசாஃப்ட், IBM, அக்சென்சர், E&Y, டெலாய்ட் போன்ற எமது முக்கிய தொழில்நுட்பக்கூட்டு நிறுவனங்களின் சேவைகளும் கோரிப் பெறப்படுகின்றன.


வசதியுடன் கூடிய ஆபரணம் வாங்கும் அதியற்புத அனுபவத்தைத் தருவதில் உலகப்புகழ் பெற்றுள்ள மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்காக ‘10 மலபார் வாக்குறுதிகள்’ என்கிற தலைப்பில் அவர்களுக்கேற்ற கொள்கைகளுடன் ஒப்பற்ற தரம்/சேவை உத்தரவாதமும் தருகிறது. 


வாழ்நாள் முழுவதற்குமான பாராமரிப்பு, இலவசக் காப்பீடு, உத்திரவாத்த்துடன் கூடியா பை-பேக் வசதி, IGI, GIA - தரச்சான்றிதழ் பெற்று உலகெங்கும் நடத்தப்படும் 28-அம்ச தரச்சோதனைகளில் தேறிய நகைகள், தங்க பரிவர்த்தனையில் ஜீரோ கழிவு, பரிபூரண ஒளிவுமறைவின்மை, 916-ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய தூய தங்கம், பொறுப்பான முறையில் தங்கம் பெறுதல், நியாய விலை, நியாயமான தொழிற்பயிற்சி உட்பட அனைத்தும் ‘மலபார் வாக்குறுதி’களில் அடங்கும்.


பொறுப்பான முறையில் தங்கத்தைக் கொள்முதல் செய்தல், தார்மிக முறையில் தொழில் பயிற்சி செய்தல், ஒளிவுமறைவற்ற, தொழில்முறை நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் விதிமுறைகளை ஒன்று விடாமல் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் பின்பற்றிவருகிறது. வெற்றிகரமாகச் செயல்படும் பெரும்பாலான நிறுவனங்கள் பொறுப்புணர்வு, நீடித்து நிலைக்கும் தன்மையைத் தனது முக்கியத் தொழிற்பயிற்சியாக ஆக்குவதாக மலபார் குழுமம் நம்புகிறது. 


1993-இல் தொழில் தொடங்கியது முதல் லாபத்தில் 5%-ஐ இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சமூகத்தின் தேவைக்கு இக்குழுமம் ஒதுக்கி வந்துள்ளது. பசி, சுகாதார நலம், மகளிர் மேம்பாடு, வீட்டு வசதி, சுற்றுப்புறச் சூழல் ஆகிய முக்கியத் துறைகளை குவிமையாமக்கி இக்குழுமம் செயல்பட்டு வருகிறது.


ஆண்டுக்கு 4.1 பில்லியன் டாலர் வருமானத்துடன் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமாக விளங்கும் மலபார் குழுமத்தின் முக்கிய நிறுவனமாக 1993இல் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டது. 


தற்போது ஆபரண விற்பனையில் உலகின் 6ஆவது மாபெரும் சில்லறை வர்த்தக நிறுவனம் என்ற பெருமையுடன் விளங்கும் இந்நிறுவனத்தின் வலுவான சில்லறை வர்த்தக நெட்வொர்க்கில் இந்தியா, மத்தியக் கிழக்காசிய நாடுகள், கிழக்காசிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளில் அமைந்துள்ள 300 விற்பனை மையங்கள், பலவித அலுவலகங்கள், டிசைன் சென்டர்கள், உற்பத்திப் பிரிவுகள், தொழிற்சலைகள் ஆகியவை அடங்கும். 


4000-க்கும் அதிகமான பங்குதாரர்களுக்குச் சொந்தமான இக்குழுமத்தில் நிறுவனத்தின் தொடர் வெற்றிக்குப் பணியாற்ற தம்மை அர்ப்பணித்துள்ள 26 நாடுகளைச் சேர்ந்த 16,500-க்கும் மேற்பட்ட தொழில்முறைப் பணியாளர்களும் அடங்குவர். 


www.malabargoldanddiamonds.com என்கிற ஆன்லைன் ஸ்டோரில் மலபார் கோல்டு & டைமன்ட்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்த படியே தமக்குப் பிடித்த ஆபரணங்களை எந்நேரத்திலும் எந்நாளிலும் வாங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.