மகாராஷ்டிரா லக்ஷ்மி கூட்டுறவு வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இன்று ரத்து செய்துள்ளது. சோலாபூரை தலைமையகமாக கொண்டு இயங்கும் லக்ஷ்மி கூட்டுறவு வங்கியிடம் போதுமான முதலீடு இல்லை என்றும் ஒழுங்குமுறைகளை சரியாக கடைபிடிக்கவில்லை என்றும் கூறி அதன் உரிமத்தை ஆர்பிஐ ரத்து செய்துள்ளது.






இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில், "வங்கி வர்த்தகத்தை நடத்த மஹாராஷ்டிராவின் சோலாப்பூரில் உள்ள லக்ஷ்மி கூட்டுறவு வங்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949, பிரிவு 56, உள்பிரிவு 5(பி) இன்படி,
வைப்புகளை ஏற்றுக்கொள்ளவும் வைப்புத்தொகையை திருப்பிச் செலுத்தவும் உடனடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


மகாராஷ்டிராவின் கூட்டுறவு ஆணையர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம், வங்கியை மூடுவதற்கான உத்தரவை வெளியிடுமாறும், வங்கிக்கு ஒரு கலைப்பாளரை நியமிக்குமாறும் ரிசர்வ் வங்கி கூறியது.


மகாராஷ்டிராவின் கூட்டுறவு ஆணையர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம், வங்கியை மூடுவதற்கான உத்தரவை வெளியிடுமாறும், வங்கியின் சொத்துகளை விற்க கலைப்பாளரை நியமிக்குமாறும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.


வங்கி கலைக்கப்படும்போது, ​​ஒவ்வொரு வைப்புத்தொகையாளரும் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷனிடமிருந்து 5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் இன்சூரன்ஸ் க்ளைம் தொகையைப் பெறுவதற்கு உரிமை உண்டு என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.






வங்கி சமர்ப்பித்த தரவுகளின்படி, 99 சதவீத வைப்புத்தொகையாளர்கள், தங்கள் வைப்புத்தொகையின் முழுத் தொகையையும் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷனிடமிருந்து பெற உரிமை பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.