நாள்: 23.09.2022


நல்ல நேரம் :


காலை 9.15 மணி  முதல் 10.15 மணி வரை


மதியம் 1.45 மணி முதல் 2.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 12.15 மணி முதல் 1.15 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு :


காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை


குளிகை :


காலை 7.30 மணி முதல் மதியம் 8.30 மணி வரை


எமகண்டம் :


மதியம் 3.00 மணி முதல் மதியம் 4.30 மணி வரை


சூலம் –மேற்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, உங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் இன்று கட்டுப்படுத்த வேண்டும். இன்று சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரும். பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். இந்த அணுகுமுறையின் மூலம் வெற்றி காணலாம். இன்று பணப்புழக்கம் குறைந்து காணப்படும்.தேவையற்ற செலவுகள் கவலையை அளிக்கும்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, இன்று சிறப்பான நாள் அல்ல. விரும்பும் பலன் கிடைக்கும் சூழ்நிலை காணப்படாது. விட்டுக்கொடுத்து போவதன் மூலம் நற்பலனகள் காணலாம். பணியிடத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். திறம்பட பணியாற்ற பணிகளை ஒழுங்குபடுத்தி செய்ய வேண்டும்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். உங்கள் இலக்குகளை நிறைவேற்றும் தன்னம்பிக்கை உங்களிடம் காணப்படும். உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு ஏற்ற நாள். பணிகளில் உங்கள் தனிப்பட்ட திறமைகளை காட்டுவீர்கள். இது உங்கள் செயல்திறனில் வெளிப்படும்.


கடகம் :


கடக ராசி நேயர்களே, நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். உங்கள் அணுகுமுறையில் வேகம் காட்டக் கூடாது. திறமையுடன் பணியாற்ற திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். இன்று அதிகப் பணிகள் காணப்படும். உங்கள் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்காது. இதனால் சில சமயங்களில் உணர்ச்சிவசப்படுவீர்கள்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, இன்று மிதமான பலன்களே கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் காணப்படும் சூழ்நிலை ஏற்படலாம். மனக் குழப்பங்கள் காணப்படும். அதிக பணிகள் காணப்படும். நல்ல பலன்களைக் காண திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, இன்று எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்காது. தீய விளைவுகளை தடுப்பதற்கு நீங்கள் ஆழ்ந்து யோசித்து எந்தச் செயலையும் தொடங்க வேண்டும்.வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கவனமாகப் பேசினால் நல்ல விளைவுகள் கிடைக்கும். இன்று உங்கள் பணிகளை திறமையாக ஆற்ற முடியாதபடி ஏமாற்றங்களும் தடைகளும் காணப்படும். உங்கள் சக பணியாளர்களுடனான பேச்சு வார்த்தைகளும் திருப்தியாக இருக்காது.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, உங்கள் முயற்சிகளில்விரும்பத்தக்க பலன்கள் நிச்சயமாகக் கிடைக்கும். வெற்றி பெறுவதற்கான உறுதி உங்களிடம் காணப்படும். உங்களின் நம்பிக்கை உணர்வு உங்களை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். பணியில் முன்னேற்றம் காணப்படும். இன்று புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமை கொள்வீர்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பது நல்ல பலன் தரும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். நீங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, இன்று எதிர்பாராத நிச்சயமற்ற நிலைமை காணப்படும். நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும். இன்றைய சவால்களை சமாளிக்க பொறுமை அவசியம். கவனக் குறைவால் பண இழப்பு ஏற்படலாம். எனவே சிறப்பாக பணியாற்ற கவனம் தேவை.


மகரம் :


மகர ராசி நேயர்களே, இன்று அதிகமாக சிந்தனை வயப்படும் நிலை காணப்படும். எதையும் எளிதாக எடுத்துக் கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். தியானம் மேற்கொள்வது நல்லது. பணி நிமித்தமான பயணம் சாத்தியம். அதிக பணிகள் காரணமாக சவாலான சூழ்நிலைகளை சந்திப்பீர்கள். அதனால் சோர்ந்து போவீர்கள்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, இன்று உங்கள் லட்சியங்களை அடைவதற்கு சாதகமான நாள். உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். அடிக்கடி பயணம் ஏற்படும். அதனால் பலன் உண்டாகும். உங்கள் பணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டை பெறுவீர்கள். இன்று உற்சாகமாகப் பணி புரிவீர்கள்.


மீனம்:


மீன ராசி நேயர்களே, இன்று சுறுசுறுப்பான நாள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.உங்கள் முயற்சிகளில் வெற்றி எளிதில் கிடைக்கும். எனவே உற்சாகமாக காணப்படுவீர்கள். சகபணியாளர்கள் உதவிகரமாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். நீங்கள் சிறப்பாக பணியாற்றி உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.