15 கிலோ எடை கொண்ட வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.825ல் இருந்து ரூ.850 ஆக அதிகரித்துள்ளது. அதாவது ரூ.25 உயர்ந்துள்ளது. அதேபோல 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை ரூ. 84.50 அதிகரித்து ரூ. 1687.50 ஆக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை, சமையல் எண்ணெய் விலை உயர்வால் தவித்து வரும் பொதுமக்களுக்கு சிலிண்டர் விலை பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மக்களின் அத்தியாவசியத் தேவையாக உள்ள பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது அவர்களின் வாழ்வாதாரத்தையே சிக்கலுக்கு உள்ளாக்கி வருகிறது. கொரோனா காலத்தில் ஏற்கெனவே பொருளாதார ரீதியாக நொந்துபோகியுள்ள மக்களுக்கு இந்த விலையேற்றம் மேலும் பளுவைக் கொடுத்துள்ளது.