மத்திய அரசு எல்.ஐ.சியின் சில பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவித்திருந்தது. அதன்படி விரைவில் எல்.ஐ.சியின் எல்.ஐ.சி நிறுவனத்தின் 21 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளின் விற்பனை வரும் மே 4 முதல் 9 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை பலரும் வாங்கினர். 


இந்நிலையில் இன்று எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டது. முதல் முறையாக இன்று எல்.ஐ.சியின் பங்குகள் 872 ரூபாய்க்கு பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டது. இது எல்.ஐ.சி பங்குகள் விற்கப்பட்ட ரூபாய் 949 விலையிலிருந்து சுமார் 8% வரை குறைவாக இருந்தது. பங்குச் சந்தையில் பதிவாகிய உடன் எல்.ஐ.சியின் பங்குகள் சுமார் 880 முதல் 900 ரூபாய் வரை சென்று ஏற்றம் மற்றும் இறக்கமாக இருந்து வருகிறது. 


தற்போது பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள விலை சரிபார்ப்பு காரணமாக கடந்த சில நாட்களாக பங்குச் சந்தையில் பல நிறுவனங்களில் பங்குகள் வீழ்ச்சியை கண்டுள்ளன. இதன்காரணமாக எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளின் விலையும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த மே4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை பலர் எல்.ஐ.சியின் ஐபிஒவை வாங்கியிருந்தனர். அவர்களுக்கு மே 12 ஆம் தேதி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து இன்று எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்பட்டது. எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை வாங்க 3 மடங்கிற்கு மேலானவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதன்காரணமாக எல்.ஐ.சியின் பங்குகளுக்கு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் போது மிகவும் அதிகமான விலையில் இருக்கும் என்று கூறப்பட்டது.


எல்.ஐசி நிறுவனம் 1956ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. 65 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் எல்.ஐசி நிறுவனம் காப்பீட்டு பாலிசிகளை அளித்து வருகிறது. காப்பீட்டு பாலிசி அளிக்கும் துறையில் உலகளவில் எல்.ஐசி நிறுவனம் ஐந்தாவது பெரிய நிறுவனமாக இருந்து வருகிறது. எல்.ஐ.சி நிறுவனத்தின் மொத்த வருமான கடந்த 2020-21 நிதியாண்டில் சுமார் 6.82 டிரில்லியன் ரூபாயாக இருந்தது. எல்.ஐ.சியின் வராக்கடன் மதிப்பு 6 சதவிகிதமாக உள்ளதாக கணக்கு தனிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண