ஜொமோடோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை கடந்தது, இந்தியாவில் பட்டியலாகும் முதல் யுனிகார்ன் நிறுவனம், இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் முதல் 50 நிறுவனங்களின் பட்டியலில் ஜோமோட்டோ இடம்பிடித்திருக்கிறது என ஜொமோட்டொ ஐபிஓ குறித்து பல முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை தவிர பல மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன என்பது உள்ளிட்ட சில முக்கிய செய்திகள் உள்ளன.


ஆனால் முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம் கிடைத்தது என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இன்ஃபோ எட்ஜ் நிறுவனத்தின் நிறுவனர் சஞ்சீவ் 1,050 மடங்குக்கு மேல் லாபம் ஈட்டி இருக்கிறார்.


ஜொமோட்டோ நிறுவனத்தின் மிக ஆரம்ப காலத்திலே இன்ஃபோஎட்ஜ் முதலீடு செய்தது. 2010-ம் ஆண்டு 4.7 கோடி ரூபாயை இன்ஃபோஎட்ஜ் முதலீடு செய்தது. இதற்கான ஜொமோடோ நிறுவனத்தின் 18.5 சதவீத பங்குகள் இன்ஃபோ எட்ஜ்க்கு வழங்கப்பட்டன.



ஐபிஒ சமயத்தில் ஒரு பங்கு ரூ.76 என்னும் அளவில் சுமார் 3.32 சதவீத பங்குகளை விற்பனை செய்தது. இதன் மூலம் ரூ.375 கோடி இன்ஃபோஎட்ஜ்க்கு கிடைத்தது. மீதம் 15.23 சதவீத பங்குகள் உள்ளன. ரூ.76-க்கு ஒதுக்கப்பட்ட பங்கு வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் ரூ.126க்கு முடிந்தது. இதன் மூலம் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் ரூ.98,849 கோடியாக முடிந்தது. மீதமுள்ள 15.23 சதவீத பங்குகளின் மதிப்பு ரூ.15000 கோடிக்கு மேலே இருக்கிறது. 11 ஆண்டுகளில் 1050 மடங்குக்கு லாபம் கிடைத்திருக்கிறது.


வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 138.9 ரூபாய் வரை ஜொமோட்டோ பங்கு வர்த்தகமானது. இந்த விலையுடன் ஒப்பிட்டால் 1140 மடங்கு அளவுக்கு லாபம் கிடைத்திருக்கும்.


இன்ஃபோஎட்ஜ்-க்கு அடுத்து சீனாவின் ஆண்ட் குழுமம் 16.5 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. ஆண்ட் குழுமத்தின் பங்குகளின் மதிப்பு ரூ.16,268 கோடி ரூபாயாக இருக்கிறது.



இந்த பிரிவில் போட்டி நிறுவனமான உபெர் ஈட்ஸ் நிறுவனம் இருந்தது. அந்த நிறுவனத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு ஜொமோட்டோ வாங்கியது. அதற்கு ரொக்கமாக கொடுக்கலாமல் ஜொமோட்டொ நிறுவனத்தின் பங்குகள் வழங்கப்பட்டன. அதனால் ஜொமோட்டோ நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகள் உள்ளன. இந்த பங்குகளின் மதிப்பு சுமார் 9,000 கோடி ரூபாயாக இருக்கிறது.


இது தவிர பல சர்வதேச முதலீட்டாளர்கள் கணிசமான பங்குகளை வைத்துள்ளன. நிறுவனத்தின் நிறுவனர் தீபேந்தர் கோயல் 5.6 சதவீத பங்குகளை வைத்திருந்தார். வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் தீபேந்தவர் வசம் உள்ள பங்குகளின் மதிப்பு ரூ.5,000 கோடிக்கு மேல் இருக்கிறது.


இன்ஃபோ எட்ஜின் வேறு சில முதலீடுகள்


ஜொமோட்டோ நிறுவனத்தில் ஆரம்பகாலத்தில் முதலீடு செய்தததை போல பாலிசி பஸார் நிறுவனத்திலும் 2008-ம் ஆண்டே இன்ஃபோஎட்ஜ் முதலீடு செய்திருக்கிறது. பாலிசி பஸார் நிறுவனம் இந்த ஆண்டுக்குள் ஐபிஓ வெளியிட திட்டமிட்டிருக்கிறது. அதனால் இந்த ஐபிஓ மூலமும் இன்ஃபோஎட்ஜ் நிறுவனத்துக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இது தவிர பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இன்ஃபோஎட்ஜ் முதலீடு செய்திருக்கிறது. ஹாப்பிலி அன்மேரிட், வெகேஷன் லேப்ஸ், ரேர் மீடியா கம்பெனி, அட்டா 247, ஷாப் கிரானா, பிரிண்டோ உள்ளிட்ட சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இன்ஃபோஎட்ஜ் முதலீடு செய்திருக்கிறது.



இன்ஃபோஎட்ஜ் யார்?


இணையதளம் பிரபலம் அடைவதற்கு முன்பே தொடங்கபட்ட நிறுவனம் இது. க்ளாக்ஸோ நிறுவனத்தின் பணியாற்றிய Sanjeev Bikhchandani 1995-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை தொடங்கினார்.


https://www.naukri.com/, 99acres.com, https://www.jeevansathi.com/ உள்ளிட்ட சில பிராண்டுகளை இன்ஃபோஎட்ஜ் நடத்திவருகிறது.


இந்த நிறுவனம் நடத்தும் தொழில்களை விட செய்துள்ள முதலீடுகள் மூலமே அதிக லாபம்  கிடைத்திருக்கும்