ITR Refund: பல காரணங்களால் உங்களது ஐ.டி. ரீஃபண்ட் தொகை இன்னும் வராமல் இருக்கலாம். அவற்றுக்கான காரணம், ரீஃபண்ட் தொகையை எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம்.


வருமான வரி கணக்கு தாக்கல்:


2022-23 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 31-ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. 6.77 கோடி பேர் தங்களது கணக்கை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஜுலை மாதம் 31ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 5.83 கோடி கணக்குகளை காட்டிலும், நடப்பாண்டில்  16.1% கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைத்தாலும், கூடுதல் அவகாசம் எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், வருமான வரிதாக்கல் செய்து ரீஃபண்ட் பணம் எப்போது வரும் என அனைவரும் காத்திருக்கின்றனர். தற்போதையை நிலவரப்படி பலருக்கு ரீபண்ட் தொகை வந்திருக்கும். ஆனால் சிலர் இன்னும் இதை பெறாமல் உள்ளனர். பல காரணங்களால் இன்னும் உங்களது ரீஃபண்ட் தொகை வராமல் இருக்கும். அதன்படி,


காரணங்கள்:



  • வருமான வரி தாக்கல் செய்யும்போது அளிக்கும் தகவல்கள் உண்மையானதாக இருத்தல் அவசியம்


  • சரியான வங்கி கணக்கை பதிவு செய்திருக்க வேண்டும். வங்கிக் கணக்கு சரியாக இல்லையெனில் உங்கள் ரீஃபண்ட் கிடைக்காது. 




  • உங்கள் பான் மற்றும் ஆதார் கார்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், உங்கள் வங்கி கணக்குடன் பான் கார்டும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.




  • நீங்கள் அளிக்கும் ஆவணங்கள் உள்ள தகவல்கள் சரியானதாக இருக்க வேண்டும். ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளில் மாறுபட்ட வகையில் தகவல் இருக்கக்கூடாது. 




  • தவறான தொடர்பு எண்கள், முகவரி, மெயில் ஆகியவை தவறாக இருப்பினும் உங்கள் வருமான வரி ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதமாகும்.




ரிஃபண்ட் ஸ்டேட்டஸை எப்படி பார்ப்பது?



  • முதலில், உங்கள் வருவான வரி ரீஃபண்ட்(Income Tax Refund) நிலையைச் சரிபார்க்க, https://www.incometax.gov.in/iec/foportal/என்ற இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும். 

  • ’வரித் திரும்பப்பெறுதலின் நிலை’ (Status of Tax Refunds) என்பதை கிளிக் செய்து, உங்கள் PAN மற்றும் உங்கள் பணத்தைத் திரும்பப்பெறுதல் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு ஆண்டை (assessment year-AY) உள்ளிடவும்.

  • அதில் உங்கள் ரீஃபண்ட் தொகையின் நிலையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். பின்பு, அந்த தொகை 30 நாட்களுக்குள் உங்கள் வங்கி கணக்கிற்கு திரும்பப் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க 


Live In Relationship: "சீசனுக்கு ஏற்ப பார்ட்னர்களை மாற்றும் காதலர்கள்"  லிவ்-இன் ரிலேஷன்ஷிப் குறித்து உயர்நீதிமன்றம் பரபர கருத்து