2022-23 நிதியாண்டுக்கான இறுதி தாமதமான மற்றும் திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் ( டிசம்பர் 31, 2023 ) முடிவடைகிறது. 2022-23 நிதியாண்டிற்கான ரிட்டர்ன்ஸை தாக்கல் செய்யத் தவறியவர்களுக்கு வருமான வரித்துறை டிசம்பர் 31, 2023 வரை அவகாசம் வழங்கியுள்ளது. தற்போது வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய விரும்புவோர், தங்களின் வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணமாக ரூ.5,000 அல்லது ரூ.1,000 செலுத்த வேண்டும்.
அசல் ஐடிஆர் தாக்கல் காலக்கெடு முடிந்த பிறகு தாமதமான வருமானத்தை தாக்கல் செய்யலாம். திருத்தப்பட்ட வருமானம் குறிப்பாக முன்னர் குறிப்பிடப்படாத கூடுதல் வருமானத்தை வெளிப்படுத்துவது. வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 139(4) இன் கீழ் தாமதமான வருமானத்தை தாக்கல் செய்யலாம். அதேசமயம், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139(5) இன் கீழ் திருத்தப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்ய முடியும். இவை இரண்டையும் அசல் ITR ஐ தாக்கல் செய்வது போன்ற செயல்முறையின் படியே தாக்கல் செய்யலாம்.
ஆனால், காலதாமதமாக ரிட்டன் தாக்கல் செய்வதற்கு, வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 234Fன் கீழ் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் இல்லாத வரி செலுத்துவோருக்கு, தாமதத்திற்கான அதிகபட்ச அபராதம் ரூ.1,000 ஆக விதிக்கப்படுகிறது.
தாமதமான மற்றும் திருத்தப்பட்ட IT ரிட்டர்ன்களை எவ்வாறு தாக்கல் செய்வது?
வருமான வரிக் கணக்குகளை மின்-தாக்கல் செய்வதற்கு I-T துறை ஒரு போர்ட்டலை நிறுவியுள்ளது: incometaxindia.gov.in.
இ-ஃபைலிங் போர்டல் தளத்தை விசிட் செய்ய வேண்டும்: https://www.incometax.gov.in/iec/foportal
உங்கள் பயனர் ஐடி (பான் அல்லது ஆதார்) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைந்து வருமான வரியை தாக்கல் செய்யலாம்.
மேலும் படிக்க