ITR Filing: 2022-23 நிதியாண்டுக்கான ITRஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வருமான வரி தாக்கல்


நிதியாண்டு நிறைவு பெறவுள்ள நிலையில், மக்கள் தங்கள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர். 2022-23 நிதியாண்டுக்கான ITRஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  


இதற்காக வருமான வரித்துறை ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 படிவங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான வசதியை தொடங்கப்பட்டுள்ளது. ஐடிஆர் 1 மற்றும் 4 படிவங்களை மாத சம்பளம் வாக்குபவர்கள், மூத்த குடிமக்கள், தொழில் முனைவோர் வணிகர்கள் ஆகியோர் இந்த படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஐடிஆர் 4 படிவத்தை ஆண்டுக்கு 50 லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள், தொழில் முனைவோர் தாக்கல் செய்ய வேண்டும்.


வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு முதலில் வரி செலுத்துவோர் தேவையான அனைத்து நிதி ஆவணங்களையும் சேகரிக்க வேண்டும். அதாவது சம்பளச் சீட்டு, வங்கி அறிக்கைகள் மற்றும் பிற வருமானம் மற்றும் செலவு தொடர்புடைய பதிவுகள் போன்றவற்றை எடுத்துவைத்து கொண்டு ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.  ஐடிஆர் படிவம் தாக்கல் செய்யம்போது தவறுகள் வருவது இயல்பு. அதிலும் பொதுவாக கீழ் கண்ட தவறுகளை மட்டும் செய்வதை தவிர்க்க வேண்டும்.


ஐடிஆர் படிவம்


ஐடிஆர்  தாக்கல் செய்யும்போது பொதுவான தவறுகளில் ஒன்று ஐடிஆர் படிவத்தை பயன்படுத்துவது. அதாவது, வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும்போது தவறான படிவத்தை பயன்படுத்தி தாக்கல் செய்வது தான். அப்படி தாக்கல் செய்தால் வருமான வரித்துறையால் நிராகரிப்படும். 


வருமானம்


மற்றொரு முக்கியமான தவறு என்னவென்றால், வருமானத்தை தவறாக வருமான வரித்துறைக்கு தெரிவிப்பது. சம்பளம், தொழில், வீட்டுச் சொத்து, மூலதன ஆதாயங்கள் மற்றும் முதலீடுகள் போன்றவற்றின் வருமானத்தை, வருமான வரி அறிக்கையில் சரியாக தெரிவிக்க வேண்டும்.


வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரி பார்க்க வேண்டும்


ஐடிஆர் தாக்கல் செய்யும் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், உங்கள் வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டியது அவசியம். அப்படி சரிபார்ப்பதன் மூலம், வருமான வரித் துறை நமது வங்கிக் கணக்கில் வரியை திரும்ப செலுத்துவதை சாத்தியமாக்கும்.


வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரிபார்ப்பது எப்படி?



  • incometax.gov.in க்குச் செல்லவும்.

  • உங்கள் ஆதார் அல்லது பான் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையவும்.

  • 'My Profile' என்பதைத் தேர்ந்தெடுத்து, ‘My Bank Account’ என்பதைக் கிளிக் செய்யவும்.

  • ‘Add Bank Account’ endra ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

  • கணக்கு எண், வகை, கணக்கு வைத்திருப்பவரின் பெயர், IFSC குறியீடு, வங்கி பெயர் போன்ற தேவையான விவரங்களை உள்ளிடவும்.

  • 'validate' பட்டனை கிளிக் செய்து உங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.


இந்த செயல்முறையை முடித்ததும், சரிபார்ப்பு நிலை உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.


ஐடிஆர்-ஐ verify செய்ய மறப்பது


வருமான வரி  அறிக்கையை தாக்கல் செய்யப்பட்ட பின்பு, ஐடிஆர்-ஐ verify செய்வது அவசியம். இதற்கு 30 நாட்கள் கால அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.