தொடர் வைப்புத்தொகை : இந்திய முதலீட்டாளர்கள் பெரும்பாலும் நல்ல வருமானத்தை அளிக்கும் திட்டங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இவர்கள் சேமிக்கவும் முதலீடு செய்யவும் தயாராக இருக்கிறார்கள், தங்கள் வசதி மற்றும் தேவைகளின் அடிப்படையில் புதிய திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள் .

Continues below advertisement


நீங்கள் பாதுகாப்பான மற்றும் அதிக வருமானம் தரும் முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால் , ஊழியர் வருங்கால வைப்பு நிதி ( EPF) மற்றும் தொடர் வைப்புத்தொகை ( RD) ஆகியவை நல்ல தேர்வாக இருக்கலாம். இருப்பினும், இரண்டு திட்டங்களுக்கும் இடையே சில ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் உள்ளன அது என்ன என்பதை காண்போம்.


ஊழியர் வருங்கால வைப்பு நிதி(EPF)


ஊழியர் வருங்கால வைப்பு நிதி, வேலை செய்யும் தனிநபர்களுக்கு ஒரு நல்ல மதிப்புமிக்க ஓய்வூதியத் திட்டமாக செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், பணியாளர் மற்றும் முதலாளி இருவரும் 12 சதவீத பங்களிப்பைச் பெருகிறார்கள் . இதற்கு அரசு   ஆண்டுதோறும் வட்டி செலுத்துகிறது. இந்த வட்டி விகிதம் நடப்பு ஆண்டில் சுமார் 8.25 சதவீதமாக உள்ளது.


ஊழியரால் டெபாசிட் செய்யப்படும் முழு முதிர்வுத் தொகையும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. நீண்ட கால முதலீட்டு வரம்பு காரணமாக, EPF பெரும்பாலும் RD-ஐ விட சிறந்த வருமானத்தை வழங்குகிறது . இருப்பினும், நீங்கள் விருப்பப்படி EPF- ல் இருந்து நிதியை எடுக்க முடியாது. திருமணம், கடுமையான நோய் மற்றும் குழந்தைகளின் கல்வி போன்ற சில சூழ்நிலைகளில் மட்டுமே நீங்கள் EPF- ல் இருந்து நிதியை எடுக்க முடியும் .


தொடர் வைப்புத்தொகைகள்- Recurring Deposit


சிறிய அளவிலான பணத்தை சேமித்து , தங்கள் சேமிப்பில் நல்ல வருமானத்தை ஈட்ட விரும்புவோருக்கு தொடர் வைப்புத்தொகைகள் சிறந்தவை . நீங்கள் ஒரு வங்கி அல்லது தபால் நிலையத்தில் ஒரு RD கணக்கை எளிதாகத் திறக்கலாம். நீங்கள் அதில் 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம் .


நீங்கள் விரும்பினால் இந்தக் காலத்தை நீட்டிக்கலாம் . RD வட்டி விகிதங்கள் 6 முதல் 7.5 சதவீதம் வரை இருக்கும். இந்த முதலீட்டில் கிடைக்கும் வட்டி வரிக்கு உட்பட்டது . மேலும் வங்கி வட்டி விகிதங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை .


ஒட்டுமொத்தமாக , நீங்கள் நீண்ட கால முதலீட்டிற்குத் தயாராக இருந்தால், ஊழியர் வருங்கால வைப்பு நிதி ( EPF) மற்றும் குறுகிய கால RD ஆகியவை ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். இருப்பினும், எந்தவொரு முதலீட்டையும் செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரை அணுகவும் . உங்கள் தேவைகளின் அடிப்படையில் முதலீட்டு விருப்பங்களைத் தேர்வு செய்யவும் .