வாரத்தின் நான்காவது நாளான இன்று வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு சென்செக்ஸ் குறியீடு 597.77 புள்ளிகள் (1.14%) அதிகரித்து 50,331.61 புள்ளிகளாக காணப்பட்டன. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி குறியீட்டு எண் 158.15 புள்ளிகள் (1.06%) அதிகரித்து 15,022.70 புள்ளிகளாக இருந்தது. கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலையில் நாடு சிக்கி தவிக்கும் நிலையில், நான்காவது நாளாக பங்குகள் உயர்ந்து லாபத்துடன் மற்றும் பங்குகள் விற்பனை லாபத்துடன் காணப்படுவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 68.82 (0.14%) புள்ளிகள் உயர்ந்து 49,802.66 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி −34.95 (0.24%) புள்ளிகள் குறைந்து 14,821.20 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.