இன்று காலை நிலவரப்படி இந்திய பங்குச்சந்தையான நிப்டி 17 ஆயிரத்து 188 ஆக அதிகரித்துள்ளது. நேற்று பங்குச்சந்தை முடிவின்போது இருந்ததை காட்டிலும் 0.2. சதவீதம் அதிகரித்துள்ளது. நேற்று நிப்டி பங்குச்சந்தை முடிவடையும்போது 17 ஆயிரத்து 149 புள்ளிகளாக இருந்தது.
அதேபோல, சென்செக்ஸ் புள்ளிகளும் சற்று அதிகரித்துள்ளது. நேற்று முடிவடையும்போது சென்செக்ஸ் புள்ளிகள் 57 ஆயிரத்து 491 ஆக இருந்தது. இன்று காலை 10 மணி நிலவரப்படி 0.1 சதவீதம் அதிகரித்து 57 ஆயிரத்து 565 ஆக அதிகரித்துள்ளது. இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், இன்று சற்று ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு ஆறுதலைத் தந்துள்ளது.
வாரத்தின் முதல்நாளான நேற்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்தது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய பங்குச்சந்தைகளைப் பொறுத்தவரையில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தின் இடைப்பட்ட காலத்தில் சிறிய பின்னடைவை சந்தித்தது. பின்னர், பங்குச்சந்தைகள் மீண்டு புதிய உச்சத்தை தொட்டது.
இந்த நிலையில், சர்வதேச சந்தை நிலவரங்களையொட்டி கடந்த சில நாட்களில் லாப நோக்கு விற்பனை அதிகரித்ததன் காரணமாக மட்டும் இந்திய பங்குச்சந்தைகள் 7 சதவீதம் வரை குறைந்துள்ளதாக பங்குச்சந்தைகள் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச அளவில் காணப்படும் மந்தநிலை காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஒரே நாளில் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் 58 ஆயிரம் புள்ளிளுக்கும் கீழ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது,
நேற்றைய நிலவரத்தின்போது சென்னைசெக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப்பங்குகள் அனைத்தும் வீழ்ச்சியில் இருந்து தப்பவில்லை. இந்த வீழ்ச்சிப் பட்டியலில் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனப் பங்கின் விலை 5.98 சதவீதம் சரிந்து முதலிடத்தில் இருந்தது. இதைத்தொடர்ந்து, பஜாஜ் பைனான்ஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, டைட்டன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் விலையும் 4 சதவீதத்திற்கும் மேல் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்