இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்று வரும் உலகளாவிய விற்பனைக்கு இடையில், முதன்முறையாக ஒரு அமெரிக்க டாலருக்கு ரூபாய் 78-க்கு கீழ் சரிந்துள்ளது. 


ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 36 காசுகள் சரிந்து 78.29 ஆக இருந்தது. அமெரிக்க பணவீக்கம் கடந்த 40 ஆண்டு கால உயர்விற்கு உச்சம் தொட்ட பின்னர் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி  தனது மதிப்பினை குறைப்பதன் மூலம் இந்திய மதிப்பில் சரிவை சந்தித்துள்ளது. 


உலகளாவிய முதலீட்டாளர்கள் அமெரிக்க நாணயத்தின் மதிப்பை கண்காணித்து ஒட்டுமொத்த ஆபத்து-எதிர்ப்பு உணர்வுக்கு மத்தியில் பாதுகாப்பான புகலிட நாணயத்தின் பக்கம் திரும்பியுள்ளனர். அந்நிய செலாவணி வர்த்தகர்களின் கூற்றுப்படி, பலவீனமான ஆசிய நாணயங்கள், உள்நாட்டு பங்குகளில் மந்தமான போக்கு மற்றும் தொடர்ச்சியான வெளிநாட்டு மூலதன வெளியேற்றம் ஆகியவை முதலீட்டாளர்களின் உணர்வுகளை எடைபோட்டது. 


வங்கிகளுக்கிடையேயான அந்நியச் செலாவணியில், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 78.20 ஆகத் தொடங்கியது. அதன் பின் 78.29 ஆகக் காணப்பட்டது.கடைசியாக தற்போது 36 பைசா வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 


கடந்த வெள்ளிக்கிழமை ரூபாயின் மதிப்பு 19 காசுகள் சரிந்து அமெரிக்க டாலருக்கு எதிராக 77.93 என்ற புதிய மதிப்பை தொட்டது. 






இதுகுறித்து, ஃபின்ரெக்ஸ் கருவூல ஆலோசகர்களின் கருவூலத் தலைவர் அனில் குமார் பன்சாலி கூறுகையில், “பலவீனமான உலகளாவிய உணர்வுகள் மற்றும் பலவீனமான ஆசிய மற்றும் ஐரோப்பிய நாணயங்கள், ரிசர்வ் வங்கி 77.70 ஐத் தாண்டவில்லை என்பதை உறுதிசெய்த பிறகு, ரூபாயின் மதிப்பு 78 க்கு கீழே திறக்க அனுமதித்தது. அடுத்த சில நாட்களில் ரிசர்வ் வங்கி எப்படி நடந்து கொள்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்றார். 


இதற்கிடையில், உலகளாவிய எண்ணெய் பெஞ்ச்மார்க்கில் ஒரு பீப்பாய்க்கு 1.46 சதவீதமாக சரிந்து 120.23 டாலராக உள்ளது. காலை 10.15 மணியளவில், 30-பங்குகளின் பிஎஸ்இ சென்செக்ஸ் 1,540 புள்ளிகள் (2.84 சதவீதம்) குறைந்து 52763 ஆக இருந்தது. அதே நேரத்தில் பரந்த என்எஸ்இ நிஃப்டி 444 புள்ளிகள் (2.74 சதவீதம்) குறைந்து 15,757 ஆக இருந்து வருகிறது. 


பங்குச் சந்தை தரவுகளின்படி, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) வெள்ளியன்று ரூ.3,973.95 கோடி மதிப்புள்ள பங்குகளை பெற்று மூலதனச் சந்தையில் நிகர விற்பனையாளர்களாக இருந்து வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண