பங்கு சந்தை நிலவரம்:


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 402.73 புள்ளிகள் உயர்ந்து 62,533.30 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 110.85 புள்ளிகள் உயர்ந்து 18,608 புள்ளிகளாக உள்ளது.






இன்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 170.1 புள்ளிகள் உயர்ந்து 62,300.67 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 43.7 புள்ளிகள் உயர்ந்து 18,540.85 புள்ளிகளாக இருந்தது. கடந்த சில  நாட்களாகவே மந்தமாக இருந்த பங்குச்சந்தையானது இன்று ஏற்றத்துடன் காணப்படுகிறது. 


பணவீக்கத்தை குறைப்பதற்காக அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை அதிகரிக்கும் என சூழ்நிலை நிலவுகிறது. இதன் தாக்கத்தால், பங்கு சந்தை வளர்ச்சியின் வேகம் குறைந்தே காணப்படுவதாக பங்கு சந்தை வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். 








இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாய் மதிப்பானது 36 காசுகள் குறைந்து 82.87 ரூபாயாக ஆக உள்ளது.