பிரபல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ,  பிரபல காஸ்மெட்டிக் நிறுவனமான  Sephora-இன் இந்திய உரிமத்தை வாங்க பேச்சுவார்த்தை செய்து வருகிறது.


இந்திய பில்லினர்களில் ஒருவரான  முகேஷ் அம்பானியின் குழும நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மூலம் நடத்தப்படும் ரிலையன்ஸ் ரீடெய்ல்,  பிரெஞ்சு அழகு பொருட்கள் விற்பனையாளரான செஃபோராவுக்கான உரிமையைப் பெற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக பிரபல ராயட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.பிரெஞ்ச் ஆடம்பரப் பொருட்கள் குழுமமான LVMH (LVMH.PA) க்கு சொந்தமான Sephora, இந்தியாவில் 13 நகரங்களில் அழகுசாதனப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், தோல் பராமரிப்பு, ஒப்பனை மற்றும் முடி பராமரிப்பு போன்ற வகைகளில் 25 கடைகளைக் கொண்டுள்ளது. இது Arvind Fashions Ltd (ARVF.NS) செயல்பாடுகளுக்கு கீழே இயங்குகிறது.




இந்த நிலையில்  இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளரான ரிலையன்ஸ் (RELI.NS) யூனிலீவர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் 6.5 பில்லியன் டாலர்  முதலீட்டில் நுகர்வுப் பொருட்களின் வணிகத்தை உருவாக்குவதை இலக்காக கொண்டுள்ளது. அதன் அடிப்படையொல்  டஜன் கணக்கான சிறிய மளிகை மற்றும் உணவு அல்லாத பிராண்டுகளை வாங்க திட்டமிட்டுப்பதாக செய்திகள் வெளியான நிலையில் , தற்போது Sephora நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.  இதுவரையொல் Sephora இன் செயல்பாடுகள் Arvind Fashions Ltd (ARVF.NS) கீழ் செயல்பட்டு வருகிறது. இனிமேல் அது  Reliance Retailக்கு மாற்றப்படும் என தி மிண்ட் நாளிதல் தெரிவித்துள்ளது.



ஆறு மாதங்களுக்குள் 50 முதல் 60 மளிகை, வீட்டு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பிராண்டுகளின் போர்ட்ஃபோலியோவை உருவாக்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது, மேலும் அவற்றை நாடு முழுவதும் உள்ள mom-and-pop stores  என வகைப்படுத்தக்கூடிய சிறு, குறு மற்றும் சுயாதீனமாக இயங்கும் சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்ய  ஒரு விநியோகஸ்தர் ஆர்மியையே ரிலைன்ஸ் உருவாக்கி வருகிறது.




இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரிலையன்ஸ் பிரெஞ்சு பேஷன் ஹவுஸ் பலென்சியாகாவுடன்(Balenciaga ) நீண்ட கால உரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது . Balenciaga ஃபிரான்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பழமையான ஃபேஷன் நிறுவனம். இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஹேண்பேக்ஸ் , ஷூக்கள் போன்ற பொருட்களை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்கிறது. அதே போல  கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அமெரிக்க ஆடை  விற்பனை நிறுவனமான  Gap Inc உடன் இணைந்து , ஒரு புதிய ஒப்பந்தம் செய்தது. அதன் அடிப்படையில் அமெரிக்காவின் ஆடம்பரமான கேப் பிராண்டுகளை இந்தியாவில் விற்பனை செய்ய , ரிலைன்ஸ் முன்வந்துள்ளது.