நேற்றைய தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐபிசி குறித்து கருத்து கூறிய நிலையில் அதனை உடைக்கும் விதமாக ப.சிதம்பரம் ஒரு டீவீட்டை வெளியிட்டுள்ளார். 


ஐபிசி குறித்து பேசிய நிர்மலா சீதாராமன்


"ஐபிசி அதன் அந்தஸ்தை இழக்க முடியாது என்பதை நான் உட்பட அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்... ஐபிசியை நாங்கள் கொண்டு வந்தபோது இருந்ததைப் போலவே நாம் அனைவரும் அதை தற்போதும் வைத்திருக்க வேண்டும்…," என்று நிர்மலா சீதாராமன் ஐபிபிஐயின் ஆறாவது ஆண்டை கொண்டாடும் ஒரு விழாவில் பேசியபோது கூறினார்.


சில திவாலா நிலைத் தீர்வு செயல்முறைகளில் கடன் பெற்றவர்களால் கடனை திருப்பி செலுத்தமுடியாமல் போவது, மேலும் சிலருக்கு கடனை தள்ளுபடி செய்வது குறித்து வெளிப்படுத்தப்பட்ட அறிக்கைகள் பின்னணியில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன. கடன் வாங்குபவர்களின் சொத்துக்களின் மதிப்பு சரிவடைந்ததில், 'தாமதம்' தான் முதல் குற்றவாளி என்று குறிப்பிட்ட அமைச்சர், துன்பத்தில் உள்ள நிறுவனங்களை அலட்சியமாக நடத்த முடியாது என்றும் கூறினார்.


'வெளியில் தெரியாமல் பெரும் கடன்களை தள்ளுபடி செய்யும் இடம்தான் ஐபிசி!', நிர்மலா சீதாராமனுக்கு சிதம்பரம் பதிலடி


நிறுவனங்கள் குறித்து கவலைப்படும் வங்கிகள்


நிதியமைச்சரின் கூற்றுப்படி, ஐபிசி மற்றும் ஐபிபிஐ ஆகியவை கொரோனா தொற்றுநோய் காலத்திற்கு பிறகு மிகவும் வித்தியாசமான பிரச்சினையை எதிர்கொள்கின்றன. அங்கு நாட்டுடன் எந்த தொடர்பும் இல்லாத உலகளாவிய இடையூறுகள் உள்ளன. அவை நிறுவனங்களை பாதிக்கின்றன என்று குறிப்பிட்டார். "எங்களிடம் ஏற்பட்டுள்ள உலகளாவிய முன்னேற்றங்கள் காரணமாக ஏற்படும் இடையூறுகள், சில வாடிக்கையாளர்கள் உணரும் துயரத்தை எவ்வாறு மேலும் கையாளப் போகிறோம் என்று பல வங்கிகளே யோசிக்கும் சூழ்நிலையையும் கொண்டு வருகின்றன," என்று அவர் கூறினார். 


தொடர்புடைய செய்திகள்: அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!


ஐபிசி பிம்பம் உடைத்த ப.சி.


இந்த கருத்து குறித்து ட்வீட் செய்த முன்னாள் நிதியமைச்சர், ப.சிதம்பரம் பெரும் கடன் வாங்கும் கோடீஸ்வரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படுவது குறித்தும், மாணவர் கடன் போன்ற சிறு கடன்களை வாங்குவதில் தீவிரம் காட்டுகிறது என்றும் குறிப்பிட்டு, ஐபிசி குறித்த பிம்பங்களை உடைக்கும்படி சில தகவல்களை தெரிவித்திருக்கிறார். 











ப.சிதம்பரம் ட்வீட்


இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், "IBC செயல்முறையின் கீழ் வங்கிகள் அதிக அளவில் கடன் தள்ளுபடி செய்கின்றன என்பது குறித்த நிதியமைச்சரின் கவலையை நான் வரவேற்கிறேன். சில சமயங்களில் 95% வரை அவர்கள் கழிக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு, 514 வழக்குகளில், ரூ.5,24,000 கோடியை வங்கிகள் தியாகம் செய்ததை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்! மாணவர்களைப் போன்ற சிறு கடன் வாங்குபவர்கள் துன்புறுத்தப்பட்டாலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடனாகக் கொடுக்கப்பட்ட பெரிய தொகைகளை தள்ளுபடி செய்ய வங்கிகளுக்கு IBC செயல்முறை வசதியான வாய்ப்பாக மாறியுள்ளது. கமிட்டி ஆஃப் கிரெடிட்டர்ஸ் (CoC) என்பது ஒரு வசதியான கிளப் ஆகும். அங்கு கடன் தள்ளுபடி குறித்த முடிவுகள் வெளியில் தெரியாதபடி எடுக்கப்படுகின்றன. பெரும் கடன்களை தள்ளுபடி செய்தல் ஒரு ஊழல். நிதியமைச்சர் ஐபிசி சட்டத்தை விரைவாகவும் முழுமையாகவும் மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும். வங்கிகள் பாதிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்" என்று ட்வீட் செய்துள்ளார்.