வரும் ஜூலை 13ஆம் தேதி, சிஸ்டமை அப்டேட் செய்ய உள்ளதால் HDFC வங்கியின் சேவைகள் 14 மணி நேரத்திற்கு முடங்க உள்ளது. HDFC வங்கிக்கு நாடு முழுவதும் 93 மில்லியன் தனிநபர்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். அதோடு, வணிக கணக்குகளும் உள்ளன.
வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த வங்கி அமைப்பையும் (CBS) புதிதாக வடிவமைக்கப்பட்ட தளத்திற்கு மாற்றுகிறது HDFC வங்கி. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "செயல்திறன் வேகத்தை மேம்படுத்தவும் அதிக டிராஃபிக்கை எதிர்கொள்வதற்கான திறனை மேம்படுத்தவும் சிஸ்டமை அப்டேட் செய்ய உள்ளோம்.
நம்பகத்தன்மையை அதிகப்படுத்துவதையும் அதிக செயல்களை செய்வதற்கான திறனை அதிகப்படுத்துவதையும் இந்த நடவடிக்கை நோக்கமாக கொண்டுள்ளது. பதிமூன்றரை மணி நேர முடக்கத்தின்போது, குறிப்பிட்ட சேவைகளை மட்டுமே வாடிக்கையாளர்களால் பெற முடியும்.
சேவை முடக்கத்தின்போது கிடைக்கப்போகும் சேவைகள்:
- நெட் & மொபைல் பேங்கிங் UPI - அதிகாலை 3 மணி முதல் 3:45 மணி வரையும் காலை 9:30 மணி முதல் நண்பகல் 12:45 வரை மட்டும் மொபைல் பேங்கிங் சேவைகள் கிடைக்காது.
- பில் பேமெண்ட் - புதிய பில்களையும் ஏற்கனவே இருக்கும் பில்களை பார்க்க மட்டும் முடியும்.
- டிமேட், கார்டுகள் மற்றும் கடன்: சேவைகளை பார்க்க மட்டும் முடியும்.
- மியூச்சுவல் ஃபண்டுகள்: மியூச்சுவல் ஃபண்டுகள் தொடர்பான சேவையை மாற்ற முடியும், பார்க்க முடியும், விசாரிக்க முடியும்.
HDFC வங்கியின் சிஸ்டம் அப்டேட் எப்போது தொடங்கும்?
எப்போது தொடங்கும்: ஜூலை 13ஆம் தேதி, சனிக்கிழமை, அதிகாலை 3:00 மணிக்கு
எப்போது நிறைவு பெறும்: 13ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு
பணம் எடுத்தல்:
டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள்: எந்த ஏடிஎம்மிலிருந்தும் குறிப்பிட்ட தொகை வரை மட்டுமே பணம் எடுக்கலாம்.
ஷாப்பிங்:
கடைகளில் குறிப்பட்ட அளவு மட்டுமே ஸ்வைப் இயந்திரங்களில் பண பரிவர்த்தனைகள் நடைபெறும்.
ஆன்லைன்: குறிப்பிட்ட அளவு மட்டுமே ஆன்லைனில் வாங்க முடியும்.
கார்டுகள் மூலம் வணிகர்கள் பணம் பெற்று கொள்ளலாம். ஆனால், சிஸ்டம் அப்டேட்-க்கு பிறகே முந்தைய நாள் நடந்த பேமெண்ட்கள் கார்டில் எதிரொலிக்கும். வாடிக்கையாளர்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக சிஸ்டம் அப்டேட் செய்ய இரண்டாவது சனிக்கிழமையை வங்கி தேர்ந்தெடுத்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி நடவடிக்கைகளை அதற்கேற்ப திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.