தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாக வழக்கத்தை விட தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 50 ஆயிரத்தை கடந்து தொடர்ந்து தங்கம் விற்பனை ஆகி வருவதால் சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக தங்கம் மாறி வருகிறது.


தொடர் உச்சத்தில் தங்கம்:


மத்திய அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைத்த பிறகு தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விலை குறைந்தது. பின்னர், மீண்டும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று சவரனுக்கு ரூபாய் 52 ஆயிரத்து 520க்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்தது.


22 காரட் தங்கம் இன்று சவரனுக்கு ரூபாய் 840 தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 53 ஆயிரத்து 360க்கு இன்று விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 6 ஆயிரத்து 670க்கு விற்பனையாகிறது. 24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 7 ஆயிரத்து 125க்கு விற்பனையாகி வருகிறது. சவரனுக்கு ரூபாய் 57 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது.


சாமானியர்கள் வேதனை:


தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையும் உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 2 உயர்ந்து ரூபாய் 91க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வௌ்ளி ரூபாய் 91 ஆயிரத்திற்கு விற்கப்படுகிது.


தங்கத்தின் விலை ரூபாய் 50 ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் விற்பனையாகி வருவது சாதாரண மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தங்கமானது ஆடம்பர நகையாக மட்டுமில்லாமல், சேமிப்பாகவும் இருப்பதால் நடுத்தர வர்க்கத்தினர் பலரும் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.


தங்கம் விலை தொடர்ந்து உயர்வதற்கு புவிசார் அரசியல் பதட்டங்கள, மத்திய கிழக்கு மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தம் இதுவரை எட்டப்படாததும் முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.