சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமிற்கு இன்று ரூபாய் 7 ஆயிரத்து 200க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57 ஆயிரத்து 600க்கு விற்கப்படுகிறது. இதனால், தங்கம விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூபாய் 1320 குறைந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூபாய் 1320 குறைந்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உச்சத்திற்குச் செல்லும் தங்கம் விலை:
பொதுமக்களின் அத்தியாவசிய பொருளாக தங்கம் மாறியுள்ளது. ஏனென்றால், இந்தியாவைப் பொறுத்தவரை தங்கத்தை ஆபரணப் பொருளாக மட்டுமின்றி, தங்கள் அவசர கால பணத்தேவைக்கான பொருளாகவே பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த 21ம் நூற்றாண்டு தொடங்கியது முதலே ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கம் விலை, இந்தாண்டு முதல் தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்தது. குறிப்பாக, ரஷ்யா – உக்ரைன் போர்., இஸ்ரேல் –ஹமாஸ் போர் காரணமாகவும். ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டதன் எதிரொலியாகவும் பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது தங்களது கவனத்தை திருப்பினர்.
திடீர் குறைவு; மக்கள் மகிழ்ச்சி
இதையடுத்து, தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தாறுமாறாக உயர்ந்து வந்தது. இதையடுத்து, மத்திய அரசு இந்தாண்டு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. இதன் காரணமாக தொடர்ந்து இறங்குமுகத்தில் பட்ஜெட் அறிவிப்பு வெளியாகி இரண்டு, மூன்று நாட்களுக்கு தங்கம் விலை இருந்தது.
ஆனால், அதன்பின்பு தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. இந்த நிலையில், நேற்று ஒரு கிராம் ரூபாய் 7 ஆயிரத்து 365க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 7 ஆயிரத்து 200க்கு விற்கப்படுகிறது. கிராம் ரூபாய் 165 வரை குறைந்துள்ளதால் ஒரு சவரன் தங்கம் ரூபாய் 1320 குறைந்துள்ளது. நேற்று 22 காரட் ஒரு சவரன் தங்கம் ரூபாய் 58 ஆயிரத்து 920க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 57 ஆயிரத்து 600க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை கிராம் ரூபாய் 102க்கு விற்கப்படுகிறது.