தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக கணிசமான அளவில் குறைந்து வந்தது. குறிப்பாக, நேற்று மட்டுமே சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய் குறைந்து, 90 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் சென்ற நிலையில், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்திருந்தனர். ஆனால், இன்று  அந்த மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக, தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ஆயிரத்து 80 ரூபாய் விலை உயர்ந்துள்ள நிலையில், தங்கத்தின் இன்றைய விலை என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement


விலை குறைந்து ரூ.90,000-க்கும் கீழ் வந்த தங்கம்


கடந்த சில நாட்களில், தங்கத்தின் விலை கணிசமாக குறைந்து, சவரன் விலை 90 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் வந்தது. கடந்த 21-ம் தேதி, கிராம் 12,000 ரூபாய்க்கு சென்ற நிலையில், ஒரு சவரன் 96,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


தெடர்ந்து, 22-ம் தேதி அதிரடியாக விலை குறைந்து, ஒரு கிராம் 11,540 ரூபாயாகவும், ஒரு சவரன் 92,320 ரூபாயாகவும் விற்பனையானது. இந்நிலையல், 23-ம் தேதி மீண்டும் விலை குநைற்து, ஒரு கிராம் 11,500 ரூபாய்க்கும், ஒரு சவரன் 92,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.


பின்னர், 24-ம் தேதி மீண்டும் விலை குறைந்து, ஒரு கிராம் 11,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் 91,200 ரூபாய்க்கும் விற்பனையானது. 25-ம் தேதி சற்று விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,500 ரூபாய்க்கும், ஒரு சவரன் 92,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.


தொடர்ந்து, 26-ம் தேதி அதே விலையில் நீடித்த நிலையில், 27-ம் தேதி மீண்டும் விலை குறைந்தது. அதன்னடி, ஒரு கிராம் 11,450 ரூபாயாகவும், ஒரு சவரன் 91,600 ரூபாயாகவும் விற்பனையானது.


இந்நிலையில், 28-ம் தேதியான நேற்று அதிரடியாக விலை குறைந்து, ஒரு கிராம் 11,075 ரூபாய்க்கு சரிந்தது. அதன்படி, ஒரு சவரன் 88,600 ரூபாய்க்கு சரிந்து, பொதுமக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. ஆனால், அதை நிலைக்க விடாமல், இன்று மீண்டும் சவரனுக்கு 1,080 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.


தங்கத்தின் இன்றைய விலை


இன்று, தங்கத்தின் விலை கிராமிற்கு 135 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,210 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,080 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 89,680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


இதனால், தங்கம் விலை தொடர்ந்து குறையும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் தொடர் விலை உயர்வு இருக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.


வெள்ளி விலையும் இன்று உயர்வு


வெள்ளியின் விலையும் கணிசமாக குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. கடந்த 21-ம் தேதி ஒரு கிராம் வெள்ளி 182 ரூபாயாக இருந்த நிலையில், 22-ம் தேதி 7 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 175 ரூபாய்க்கு வந்தது.


தொடர்ந்து, 23-ம் தேதி ஒரு ரூபாய் குறைந்து கிராம் 174 ரூபாய்க்கும், 24-ம் தேதி 4 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 170 ரூபாயை எட்டியது. பின்னர், 27-ம் தேதி வரை அதே விலையில் நீடித்தது.


தொடர்ந்து, நேற்று வெள்ளியின் விலை கிராமிற்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 165 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று கிராமிற்கு ஒரு ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 166 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது, மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.