தங்கத்தின் விலை அவ்வப்போது இறங்குவதும் ஏறுவதுமாக இருந்து வருகிறது. அதில் பெரும்பாலும் ஏறுமுகம் தான் என கூறலாம். குறைவது போல் குறைந்து, புதிய உச்சங்களை அடைந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய உச்சத்தை அடைந்து, பொதுமக்களை கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது. இன்றைய விலை நிலவரம் என்ன என பார்ப்போம்.
இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்த தங்கம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 75,760 ரூபாய் என்ற புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து, 9,470 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை 76 ஆயிரம் ரூபாயை நெருங்கியதால், தங்கம் வாங்குவோர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குறைவது போல் குறைந்து பின்னர் எகிறிய விலை
முன்னதாக, கடந்த 1-ம் தேதி கிராம் 9,150 ரூபாயாகவும், சவரன் 73,200 ரூபாயாகவும் இருந்த தங்கத்தின் விலை, 2-ம் தேதி அதிரடியாக சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 9,290 ரூபாய்க்கும், ஒரு சவரன் 74,320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, 3-ம் தேதி அதே விலையில் நீடித்த விலை, 4-ம் தேதி சிறிதளவு உயர்ந்து, ஒரு கிராம் 9,295 ரூபாய்க்கும், ஒரு சவரன் 74,360 ரூபாய்க்கும் விற்பனையானது. பின்னர், 5-ம் தேதி மீண்டும் உயர்ந்து, ஒரு கிராம் 9,370 ரூபாய்க்கு சென்றது. ஒரு சவரன் 74,960 ரூபாய்க்கு எகிறியது.
பின்னர், 6-ம் தேதி மீண்டும் சற்று உயர்ந்து, ஒரு கிராம் 9,400 ரூபாயாகவும், ஒரு சவரன் 75 ஆயிரத்தை கடந்து 75,040 ரூபாயாகவும் விற்கப்பட்டது. இந்நிலையில், 7-ம் தேதியான நேற்று மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை, ஒரு கிராம் 9,400 ரூபாக்கு சென்றது. ஒரு சவரன் 75,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்த சூழலில், இன்று அதிரடியாக சவரனுக்கு 560 ரூபாய் விலை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
உச்சத்திலேயே நீடிக்கும் வெள்ளியின் விலை
இதேபோல், வெள்ளியின் விலை கடந்த 1-ம் தேதி கிராமிற்கு 2 ரூபாய் குறைந்து 123 ரூபாயாக இருந்த நிலையில், ஆகஸ்ட் 4-ம் தேதி வரை அதே விலையில் நீடித்தது.
பின்னர், 5-ம் தேதி கிராமிற்கு 2 ரூபாய் உயர்ந்து, மீண்டும் 125 ரூபாயை எட்டியது. அதைத் தொடர்ந்து, 6 தேதி கிராமிற்க ஒரு ரூபாய் உயர்ந்து 126 ரூபாயை எட்டியது வெள்ளியின் விலை. தொடர்ந்து, 7-ம் தேதியான நேற்று கிராமிற்கு ஒரு ரூபாய் உயர்ந்து, கிராம் 127 ரூபாய் என்ற உச்சத்தை அடைந்தது.
இந்நிலையில், இன்று அதே விலையில் நீடித்து, ஒரு கிராம் 127 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் உச்சத்தை எட்டியுள்ளது, பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் புதிய உச்சங்களை தொடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.