ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றிலிருந்து குறையத் தொடங்கியுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 840 ரூபாய் குறைந்துள்ளது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது விலை குறையத் தொடங்கியுள்ளது, பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. தொடர்ந்து விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
குறையத் தொடங்கிய தங்கத்தின்விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த 10-ம் தேதி, கிராம் 8,945 ரூபாயாகவும், சவரன் 71,560 ரூபாயாகவும் இருந்தது. 11-ம் தேதி கிராம் 9,020 ரூபாயாக அதிகரித்த நிலையில், சவரன் 72 ஆயிரத்தை கடந்து ஒரு சவரன் 72,160 ரூபாயாக விற்கப்பட்டது.
தொடர்ந்து, 12-ம் தேதியும் விலை உயர்ந்து, கிராம் 9,100 ரூபாயாகவும், சவரன் 72,800 ரூபாயாகவும் விற்பனையானது. இந்நிலையில், 13-ம் தேதி கிராமிற்கு அதிரடியாக 195 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,295 ரூபாயாகவும், சவரன் 74 ஆயிரத்தை கடந்து ஒரு சவரன் 74,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
பின்னர், 14-ம் தேதியும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 9,320 ரூபாயாகவும், ஒரு சவரன் 74,560 ரூபாயாக விற்பனையானது. 15-ம் தேதி அதே விலையில் நீடித்த தங்கம், 16-ம் தேதியான நேற்று விலை குறையத் தொடங்கியுள்ளது.
அதன்படி, நேற்று கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து, ஒரு கிரராம் 9,305 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 குறைந்து ஒரு சவரன் 74,440 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 840 ரூபாய் குறைந்துள்ளது தங்கத்தின் விலை.
இன்றைய விலை என்ன.?
அதன்படி, இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 105 ரூபாய் குறைந்து, கிராம் 9,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன்படி, ஒரு சவரனுக்கு 840 ரூபாய் விலை குறைந்து, சவரன் 73,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலை இதேபோல் தொடர்ந்து குறைந்தால் நன்றாக இருக்கும் என்பதே தற்போது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனாலும், சில நாட்கள் குறைந்து, பின்னர் மீண்டும் தாறுமாறாக உயர்ந்து புதிய உச்சங்களை தொட்டு வருவதால், சற்று கவலையும் அடைந்துள்ளனர்.
அதே விலையில் நீடிக்கும் வெள்ளி
வெள்ளியின் விலை, கடந்த 10-ம் தேதி 119 ரூபாயாக இருந்த நிலையில், 12-ம் தேதி வரை அதே விலையில் நீடித்தது. அதன்பின்னர், 13-ம் தேதி கிராமிற்கு ஒரு ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 120 ரூபாய் என்ற உச்ச விலையை அடைந்தது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையானது.
பின்னர், இன்று வரை கிராமிற்கு 120 ரூபாய் என் அதே விலையில் நீடிக்கிறது.