Gold Rate 12th April: எல்லாம் போச்சு.. இனிமே தங்கம் வாங்குனமாதிரி தான்.. விலை ரூ.70,000-ஐ கடந்தது...

ஆபரணத் தங்கத்தின் விலை 70 ஆயிரம் ரூபாயை கடந்து வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இன்றைய விலை என்ன என்று பார்க்கலாம்.

Continues below advertisement

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 70,000 ரூபாயை கடந்து பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால், இனி தங்கம் வாங்குவது மிகவும் கடினமாகிவிட்டதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இன்று எவ்வளவு விலை உயர்ந்துள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

ரூ.70,000-ஐ கடந்து அதிர்ச்சி அளித்துள்ள தங்கம் விலை

கடந்த வாரம் தங்கம் விலை தொடர் சரிவை கண்ட நிலையில், இந்த வாரம் அதற்கு நேர் மாறாக, தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் 4 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்த தங்கத்தின் விலை, நேற்று சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 69,960 ரூபாயை எட்டியது. ஒரு கிராம் 8,560 ரூபாயாக இருந்தது. இது, தங்கம் விலை 70,000 ரூபாயை கடந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.

அந்த அச்சத்தை உண்மையாக்கும் விதமாக, தங்கம் விலை இன்று கிராமிற்கு 25 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 8,770 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன்படி, சவரனுக்கு 200 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 70,160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயர்வு

இதேபோல், வெள்ளியின் விலையும் தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. நேற்று 108 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெள்ளி, இன்று மேலும் 2 ரூபாய் விலை உயர்ந்து, 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையற்ற தன்மையால் தங்கத்தின் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகளால், அமெரிக்க பங்குச் சந்தைகள் மட்டுமில்லாமல், பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்து வருகின்றன. இதனால், முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளதாலேயே, தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு சென்றுகொண்டிருக்கிறது. இது பொதுமக்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola