சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரு லட்சம் ரூபாயை தாண்டியதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீப காலமாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துவந்த நிலையில், விரைவில் ஒரு லட்சம் ரூபாயை எட்டும் என்று கூறப்பட்டு வந்தது. அது தற்போது நடந்துவிட்டது. இன்று காலை தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு லட்சம் ரூபாயை நெருங்கிய நிலையில், பிற்பகலில் மீண்டும் விலை உயர்ந்து, தற்போது சவரன் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது.

Continues below advertisement

ஒரு லட்சம் ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை கடந்த 9-ம் தேதி சரியாக 96,000 ரூபாயாக இருந்த நிலையில், அப்போதிலிருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. 10-ம் தேதி சற்று விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,030 ரூபாய்க்கும் ஒரு சவரன் 96,240 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 11-ம் தேதி மீண்டும் சற்று விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,050 ரூபாயாகவும், ஒரு சவரன் 96,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், 12-ம் தேதி காலை அதிரடியாக கிராமிற்கு 200 ரூபாயும், சவரனுக்கு 1,600 ரூபாயும் உயர்ந்தது தங்கததின் விலை. அதன்படி, காலையில் ஒரு கிராம் 12,250 ரூபாயாகவும், ஒரு சவரன் சரியாக 98,000 ரூபாயாகவும் விற்பனையானது.

Continues below advertisement

இந்த சூழலில், மாலையில் மீண்டும் விலை உயர்ந்து உச்சத்திற்கு சென்றது. அதன்படி, கிராமிற்கு மேலும் 120 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,370 ரூபாய்க்கு எகிறியது. சவரனுக்கு மேலும், 960 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 98,960 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. 13, 14 தேதிகளில் அதே விலையில் நீடித்த தங்கம், இன்று காலை மாலை என இரு வேளைகளிலும் விலை உயர்ந்து, ஒரு லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது.

தங்கத்தின் இன்றைய விலை என்ன.?

இன்று காலை கிராமிற்கு 90 ரூபாய் விலை உயர்ந்த தங்கம், ஒரு கிராம் 12,460 ரூபாயை எட்டியது. சவரனுக்கு 720 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 99,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், பிற்பகலில் கிராமிற்கு மீண்டும் 55 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,515 ரூபாய்க்கும், சவரனுக்கு 440 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,00,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உச்சம்

இதேபோல், வெள்ளியின் விலையும் உச்சத்தில் தான் உள்ளது. கடந்த 9-ம் தேதி கிராம் 199 ரூபாயாக இருந்த வெள்ளி, 10-ம் தேதியன்று 207 ரூபாயாக அதிரடியாக உயர்ந்தது.

தொடர்ந்து, 11-ம் தேதி மீண்டும் விலை உயர்ந்து ஒரு கிராம் 209 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 12-ம் தேதி கிராமிற்கு அதிரடியாக 7 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 216 ரூபாயை எட்டியது.

பின்னர், 13-ம் தேதி 6 ரூபாயை விலை குறைந்து, ஒரு கிராம் 210 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 14-ம் தேதியும் அதே விலையில் நீடித்தது.

இந்நிலையில், இன்று காலை கிராமிற்கு 3 ரூபாயை விலை உயர்ந்து, ஒரு கிராம் 213 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், பிற்பகலில் மீண்டும் 2 ரூபாயை விலை உயர்நது, தற்போது ஒரு கிராம் வெள்ளி 215 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாகியுள்ளனர்.