சென்னையில் ஆபரணத் தங்கத்தின்  விலை ஒரே நாளில் சவரனுக்கு 1400  ரூபாய் உயர்ந்து சவரன் 89,000 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

தங்க விலை தொடர் உயர்வு: 

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சமாக சவரனுக்கு 1400 ரூபாய் உயர்ந்து 89,000 விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமின் விலை 11,000 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

புதிய உச்சங்களை தொட்டுவரும் தங்கத்தின் விலை, கடந்த அக்டோபர் 1-ம் தேதி, கிராம் 10,950 ரூபாயாகவும், சவரன் 87,600 ரூபாயாகவும் இருந்தது. 2-ம் தேதியும் அதே விலையில் நீடித்தது.

இந்நிலையில், 3-ம் தேதி விலை சற்று குறைந்து, ஒரு கிராம் 10,900 ரூபாயாகவும், ஒரு சவரன் 87,200 ரூபாயாகவும் விற்பனையானது. 4-ம் தேதி சற்று விலை உயர்ந்து ஒரு கிராம் மீண்டும் 10,950 ரூபாய்க்கும், ஒரு சவரன் 87,600 ரூபாய்க்கும் சென்றது.

தொடர்ந்து நேற்று அதே விலையில் நீடித்த தங்கம், இன்று அதிரடியாக விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

சவரன் 89,000 கடந்தது:

இந்த நிலையில் இன்று காலை தங்கத்தின் விலை 880 ரூபாய்க்கு உயர்ந்தது, சவரன் 88,000 கடந்து விற்பனையானது,  மதியத்திற்கு பின்னர் மீண்டும் 520 ரூபாய் உயர்ந்து இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு 1400 ரூபாய்க்கு உயர்ந்தது. 

வெள்ளி விலை: 

ஒரு பக்கம் தங்கம் இப்படி ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருந்த அதே வேலையில் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 2000 ரூபாய் உயர்ந்து ₹1,67,000, ஒரு கிராம் 167-க்கும் விற்கப்படுகிறது.