Gold Price Today : பட்ஜெட் எதிரொலி! ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்க விலை..
Gold Price Today (01-02-2025): சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு சவரன் 62 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த 2 வாரங்களாக ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. நேற்று(31.01.2025) சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று வரலாற்றில் தங்க விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
பட்ஜெட்டை அடுத்து உயர்ந்த தங்க விலை:
மத்திய பட்ஜெட் 2025-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தில் விலை இன்று ஒரு நாளில் மட்டும் சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்துள்ளது.
Just In




இந்த நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அன்றே, தங்கத்தின் விலை இன்று காலை கிராமிற்கு 15 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை 7,745 ரூபாயாக விற்பனையானது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 120 ரூபாய் அதிகரித்து, சவரன் 61,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: Anbumani on Budget 2025: மத்திய பட்ஜெட் சூப்பர்... ஆனால், - அன்புமணி கூறுவது என்ன ?
மீண்டும் அதிகரித்த விலை:
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பிற்பகலில் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து சவரன் 62,380 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 7,790 ரூபாயாக விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராமுக்கு 107 ரூபாய் விற்கப்படுகிறது.
இதையும் படிங்க: Budget 2025 : தமிழ்நாடு பெயரே இல்ல! நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றம்.. பட்ஜெட்டை விளாசிய திமுக
பட்ஜெட் 2025:
2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் நடுத்தர மக்களை மகிழ்விக்கும் விதமாக, ரூ.12 லட்சம் வரையிலான வருவாய்க்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிப்பு இடம்பெற்றது. அதேநேரம், பாஜக கூட்டணி ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கும், பீகார் அரசுக்கு பட்ஜெட்டில் அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் பட்ஜெட்டுக்கு பிறகு தங்கத்தின் விலை குறையும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் தான் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது பொது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.