அட்சய திருதியை முன்னிட்டு இன்று அதாவது மே மாதம் 10ஆம் தேதி மட்டும் மூன்றாவது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே காலை 6 மணிக்கு சவரனுக்கு 360 ரூபாயும், மீண்டும் காலை 9 மணிக்கு சவரனுக்கு 360 ரூபாயும் உயர்ந்த நிலையில், மதியம் மூன்று மணி அளவில் சவரனுக்கு 520 ரூபாயும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் தங்கம் கிராமுக்கு ரூபாய் 6,770-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதன் மூலம் இன்று ஒருநாள் மட்டும் சவரனுக்கு ரூபாய் 1,240 உயர்ந்துள்ளது. தங்கத்தினை விலை இன்று ஒரே நாளில் மூன்றாவது முறையாக உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். 


தங்கம் மற்றும் அட்சய திருதியை: 


இந்தியாவில் அட்சய திருதியை தினத்தில் குண்டுமணி அளவிலாவது தங்கம் வாங்கினால், மேலும் மேலும் செல்வம் சேரும் என்ற நம்பிக்கை கொண்ட மக்கள் அதிகம். இதனால் சித்திரை மாதத்தின் அமாவசை முடிந்து மூன்றாவது நாளில் வரும் அட்சய திருதியை தினத்தில் இந்தியாவில் தங்கத்தின் விற்பனை வழக்கமான நாட்களை விடவும் பலமடங்கு அதிகமாக இருக்கும். 


இந்நிலையில் நேற்று அதாவது மே மாதம் 9-ஆம் தேதியில், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 52 ஆயிரத்து 920க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலை இன்று காலை 6 மணிக்கு 22 காரட் மதிப்பு கொண்ட ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்து 53 ஆயிரத்து 280க்கு விற்பனை செய்யப்பட்டது. 


அதன் பின்னர் காலை 9 மணி அளவில் மீண்டும் சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ரூபாய் 45 உயர்ந்தது. இதனால் காலை 9 மணிக்குப் பின்னர் ஒரு சவரன் தங்கம் ரூபாய் 53 ஆயிரத்து 640க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், மதியம் 3 மணிக்கு தங்கத்தின் விலை மீண்டும் மூன்றாவது முறையாக உயர்ந்தது. இதன் அடிப்படையில் மூன்றாவது முறையாக உயர்கையில், கிராமுக்கு ரூபாய் 65 உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ரூபாய் 540 உயர்ந்தது. இதன் மூலம், தற்போது 22 கேரட் தங்கம் சவரனுக்கு 54 ஆயிரத்து 180க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 


எப்போது தங்கம் வாங்கலாம்? - ஜோதிடர்கள் சொல்வது என்ன? 


2024 ஆம் ஆண்டு அட்சய திரிதியை நாள் இன்று (மே 10) அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை (மே 11) மதியம் 2.50 மணி வரை உள்ளது. அதேசமயம் இந்த இரு நாட்களிலும் நகைகள் வாங்க நல்ல நேரம் காலை 5.45 மணி முதல் மதியம் 12.06 வரை குறிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நகைகள் வாங்க முடியாதவர்கள், வெள்ளி, பூக்கள் போன்றவற்றையும் வாங்கினாலும் நன்மை பயக்கும் என நம்பிக்கை நிலவுகிறது