தங்கத்தை வாங்கி குவிக்கும் மக்கள்
தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்தாலும் நகைக்கடைகளில் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக தங்கத்தின் மீது முதலீடு செய்தால் எப்போதும் நஷ்டம் ஏற்படாது. மேலும் தங்களின் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாக தங்க நகைகளை மக்கள் வாங்கி வருகிறார்கள். குறிப்பாக இந்திய திருமணங்களில் தங்கத்திற்கு என முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் தான் 2021ஆம் ஆண்டு ஒரு சவரன் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலையானது 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை தலை சுற்ற வைத்துள்ளது.
தங்கம் விலை மீண்டும் உயர காரணம் என்ன.?
தங்கத்தின் விலையானது உயர பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதில் தற்போது முக்கியமாக அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக தங்கத்திற்கு பதிலாக முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் மீது தங்களது பார்வையை திருப்பினர். இதனால் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக குறைந்த்து. தற்போது போர் சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், கச்சா எண்ணெய்க்கு பதிலாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் தங்களது முதலீட்டை அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இதனால் தங்கத்தின் விலையானது உயர்ந்து வருகிறது.
உயரும் தங்கம் விலை
- ஆகஸ்ட் 14 ஆம் தேதி காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் அதிகரித்தது. கிராம் ஒன்று 14,200 ரூபாய்க்கும், சவரன் 1,13,600 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் அதிகரித்து 14,220 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 1,13,760 ரூபாய்க்கு விற்பனை.
- ஆகஸ்ட்ட் 16 ஆம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை.
- ஆகஸ்ட் 17 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் உயர்ந்து 14,270 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 1,14,160 ரூபாய்க்கு விற்பனை
இன்றைய தங்கம், வெள்ளி விலை
தங்கத்தின் விலையானது கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர வைத்தது. இந்த நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து 14,290 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து 1,14,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே நேரம் வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
