தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு
தங்கத்தின் விலையானது தினந்தோறும் புதிய புதிய உச்சம் தொட்டு வருகிறது. அதிலும் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் சவரனுக்கு சுமார் 65 ஆயிரம் ரூபாய் அதிகரித்து நகைப்பிரியர்களை தலை சுற்ற வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் மற்ற நாடுகளை விட இந்திய மக்கள் தங்க நகைகள் மீது மிகவும் ஈர்ப்பு கொண்டவர்களாக உள்ளனர். இதனால் திருமணங்கள், பிறந்தநாள் மற்றும் பண்டிகை கால நிகழ்வுகளில் தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
தங்கம் விலை அதிகரிக்க காரணம் என்ன.?
டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க மத்திய வங்கிகள் தங்கத்தில் டன் கணக்கில் வாங்கி குவித்ததால் திடீரென தங்கம் விலையானது பல மடங்கு அதிகரித்தது. மேலும் ஈரான்- அமெரிக்கா போராலும் ஒரு பக்கம் தங்கம் விலையானது உயர்ந்து வருகிறது. மேலும் வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏறி இறங்கும் விலை
- 23-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து 14,160 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து 1,13,280 ரூபாய்க்கு விற்பனை.
- 24-ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 14,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,12,800 ரூபாய்க்கு விற்பனை.
- 25-ம் தேதி தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து 1,13,600 ரூபாய்க்கு விற்பனை .
- 26-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை
இன்றைய தங்கம் விலை
கடந்த வாரம் தங்கத்தின் விலை தொடர்ந்து 3 நாட்கள் குறைந்த நிலையில், வாரத்தின் இறுதி நாள் அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளும் தங்கம் விலை உயர்ந்துள்ளது இன்று தங்கம் கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 14230 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,13,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை என்ன.?
வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 70ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
