ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாகவே தொடர் உச்சத்தில் இருந்து வருகிறது. 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சவரன் 55ஆயிரத்தை கடந்த நிலையில், 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனால் நடுத்தர வர்க்க மக்களால் தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.  இந்த நிலையில் தான் ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக திடீரென தங்கம் விலையானது குறைய தொடங்கியது. இந்த போரால் கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டதையடுத்து முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீட்டை அதிகரிக்க தொடங்கினார்கள். இதனால் திடீர் திருப்பமாக தங்கம் விலையானது தொடர்ந்து குறைந்து வந்தது. 

Continues below advertisement

ஈரான் போரால் குறைந்த தங்கம் விலை

சுமார் 20 நாட்களுக்கு மேலாக தங்கம் விலை குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய்க்கு வந்தது. அப்போது தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்ததையடுத்து மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிக்க தொடங்கியது. கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 8ஆயிரம் ரூபாய் தங்கம் விலை உயர்ந்து ஒரு லட்சத்து 8ஆயிரம் ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம் விலை நிலவரம்

  • பிப்ரவரி 23-  ஒரே நாளில் சவரனுக்கு 7,600 ரூபாய் அளவிற்கு சரிந்தது. இரவு 7 மணியளவில் திடீரென தங்கம் விலை உயர்ந்தது.
  • பிப்ரவரி 24-  720 ரூபாய் விலை உயர்ந்தது. ஒரு சவரன் 1,06,000 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 25- சவரனுக்கு 2,800 ரூபாய் அதிகரித்து 1,08,800 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 26- சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 1.09,360 ரூபாய்க்கு விற்பனை. மாலையில் தங்கத்தின் விலையானது திடீரென குறைந்தது. சவரனுக்கு 2560 ரூபாய் குறைந்து 1,06,800 விற்பனையானது. 

இன்றைய தங்கம், வெள்ளி விலை

தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் திடீரென நேற்று மாலை குறைந்தது. இந்த நிலையில், இன்று  கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து13,430 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 1,07, 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Continues below advertisement

அதே நேரம் வெள்ளியின் விலையானது தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 245 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 15ஆயிரம் ரூபாய் சரிந்து 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.