சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,224க்கும், சவரன் ரூ.33,792க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று தங்கம் ஒரு கிராம் ரூ.9 அதிகரித்து ரூ.4,233க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், ஒரு சவரன் ரூ.72 அதிகரித்து ரூ.33,864க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி 20 பைசா அதிகரித்து, ரூ.69.30க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளி, ரூ.69.50க்கு விற்கப்படுகிறது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளி ரூ.200 அதிகரித்து 69,500க்கு விற்கப்படுகிறது.