Gold Silver Price Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்தது.

Continues below advertisement

சென்னையில் காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 குறைந்து ரூ.4,500க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.36,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,859க்கும், சவரன் ரூ.38,8722க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Continues below advertisement

இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி ரூ.100 குறைந்து ரூ.75,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தங்கம் விலை


22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4520, சவரன் - ரூ.36,160


24 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4879, சவரன் - ரூ.39,032  


ஒரு கிராம் வெள்ளி - ரூ.76.00


ஒரு கிலோ வெள்ளி - ரூ.76,000 


தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் மூதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார். மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப் போகும். ஏனென்றால்,  தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.



மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன்காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில் தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola