சரவ்தேச நாணய நிதியத்தின் பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத் சமீபத்தில் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். சரவ்தேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராக பதவியேற்ற பெண் என்ற வகையில், அதன் இணை நிர்வாக அதிகாரி பொறுப்பு வகித்த முதல் பெண் என்ற வகையிலும் ஏற்கனவே சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும், கீதா கோபிநாத் மேற்கொண்டிருக்கும் சமீபத்திய சாதனை மீண்டும் ஆச்சரியத்தை அளிக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர்களின் படங்கள் வைக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ இடத்தில் கீதா கோபிநாத்தின் படம் இடம்பெற்றிருக்கிறது. சுற்றிலும் ஆண்களின் படங்கள் இருக்க, ஒற்றைப் பெண்ணாக தான் `ட்ரெண்டை உடைப்பதாக; குறிப்பிட்டுள்ளார் கீதா கோபிநாத். 


சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைமை அதிகாரிகள் 11 பேரின் படத்துடன் தனது படமும் இருப்பதைப் பகிர்ந்துள்ள கீதா கோபிநாத், `ட்ரெண்டை உடைக்கிறேன்.. சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர்களின் சுவற்றில் நானும் இடம்பெற்றிருக்கிறேன்’ எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் அவற்றுடன் படம் எடுத்துப் பகிர்ந்துள்ளார். 



50 வயதான கீதா கோபிநாத் கடந்த 2019 முதல் 2022 வரை சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக செயல்பட்டவர். தற்போது சரவ்தேச நாணய நிதியத்தின் இணை நிர்வாக இயக்குராக கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வருகிறார் கீதா கோபிநாத். 






இந்தியாவின் கொல்கத்தா நகரத்தில் பிறந்த கீதா கோபிநாத் தனது இளங்கலை படிப்பை டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியிலும், முதுகலை படிப்பை டெல்லி பொருளாதாரப் பள்ளியிலும் பயின்றவர். இவர் அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தின் முனைவர் பட்டம் பெற்றவர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண