கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஸிரோதா நிறுவனத்தின் நிறுவனர்கள் ஆண்டிற்கு 100 கோடி வரை சம்பளம் பெற உள்ளதாக செய்தி வெளியானது. அதற்கு அந்த நிறுவனம் சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்தச் செய்தி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் அதிகமாக ஆண்டு வருமானம் பெரும் டாப் 10 இந்தியன் சி.இ.ஓக்கள் யார் யார்?
1.சலீல் பாரேக்:
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக சலீல் பாரேக் கடந்த 2018ஆம் ஆண்டு பதவியேற்றார். 2020-21 ஆண்டில் இவருடைய ஆண்டு சம்பளம் 49.68 கோடி ரூபாயாக இருந்து வந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2. முகேஷ் அம்பானி:
ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி. இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருந்து வருகிறார். இவர் 44.7 சதவிகித பங்குகளை தன்வசம் வைத்துள்ளார். அது தவிர ஆண்டு சம்பளமாக 15 கோடி ரூபாய் பெற்று வருகிறார்.
3. சிபி. குருஞானி:
டெக் மகேந்திரா குழுமத்தின் சி.இ.ஓ ஆக இருந்து வருபவர் சி.பி.குருஞானி. இவர் ஆண்டு சம்பளமாக 2020ஆம் ஆண்டு 28.5 கோடி ரூபாய் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. பவன் முஞ்சல்:
ஹீரோ மோட்டோ கார்ப் குழுமத்தின் சி.இ.ஓ ஆக இருப்பவர் பவன் முஞ்சல். இவர் 2020ஆம் ஆண்டு சம்பளமாக 85.59 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக தெரிகிறது.
5. எஸ்.என்.சுப்ரமணியம்:
எல் & டி நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக இருந்து வருபவர் எஸ்.என்.சுப்ரமணியன். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். அத்துடன் 33 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். 2019ஆம் ஆண்டு இவர் 48.45 கோடி ரூபாய் ஆண்டு சம்பளமாக பெற்றுள்ளார்.
6. ராஜேஷ் கோபிநாத்:
டாடா குழுமத்தின் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக இருப்பவர் ராஜேஷ் கோபிநாத். இவர் 2020-21ஆம் ஆண்டில் 20 கோடி ரூபாய் ஆண்டு சம்பளமாக பெற்று வந்துள்ளார்.
7. விஷால் சிக்கா:
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓஆக இருந்தவர் விஷால் சிக்கா. இவர் அந்தப் பணியை விட்டு தனியாக வியானா என்று ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக இருக்கும் இவர் ஆண்டிற்கு 13 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வருகிறார்.
8. சுனில் மிட்டல்:
பாரதி தொழில் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுனில் மிட்டல் இருந்து வருகிறார். இந்த குழுமம் தகவல் தொழில்நுட்பம், காப்பீடு, கல்வி உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. அவர் கடந்த 2020ஆம் ஆண்டு 30 கோடி ரூபாயை ஆண்டு சம்பளமாக பெற்று வந்துள்ளார்.
9. குயுண்டர் பட்ஸ்சேக்:
டாட்டா மோட்டர் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியாக இவர் இருந்து வருகிறார். 2016ஆம் ஆண்டு முதல் இவர் சி.இ.ஓ ஆக பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன்பாக ஏர்பஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆக பணிபுரிந்தார். தற்போது இவர் 26.29 கோடி ரூபாயை ஆண்டு சம்பளமாக வாங்கி வருகிறார்.
10. ராஜீவ் பஜாஜ்:
பஜாஜ் மோட்டர் குழுமத்தின் சி.இ.ஓ ஆக இருந்து வருபவர் ராஜீவ் பஜாஜ். இவர் 2005 ஆம் ஆண்டு பஜாஜ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்து வருகிறார். இவர் 2020ஆம் ஆண்டு சம்பளமாக 39.86 கோடி ரூபாயை பெற்று வந்துள்ளார்.
மேலும் படிக்க: பற்றி எரியும் சமையல் எண்ணெய் விலை.. எப்படி சமாளிக்கப்போகிறது இந்தியா?