வணிக நிறுவனங்களுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கும் காலங்கள் எல்லாம் தற்போதுள்ள சூழலில் மறைந்துவிட்டது. அதற்கு மாறாக ஆன்லைன் மூலமாக தங்களுக்கு விருப்பமானவற்றை தேர்வு செய்து மக்கள் வாங்கி வருகின்றனர். இதற்காக ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களைத்தான் மக்கள் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். இத்தளங்களில் எப்பொழுது ஆபர் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பிரபல E-commerce  தளமான பிளிப்கார்ட் அதிரடி ஆபர் ஒன்றினை அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 13 முதல் ஜூன் 16-ஆம் தேதி வரை பல்வேறு ஸ்மார்ட்ஃபோன்கள், டேப்லேட்டுகள், லேப்டாப்கள், மற்றும் மின்னணு சாதனங்களின் வாங்குவோர்களுக்கு அதிரடி தள்ளுபடியில் கிடைக்கும் தெரிவித்துள்ளது. வழக்கம்போல ஃபிளிப்கார்டின் big savings days விற்பனையானது ஃபிளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதி நள்ளிரவு தொடங்கும் எனவும், மற்ற வாடிக்கையாளர்களுக்கு ஜூன்13-ஆம் முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிளிப்கார்டில் ஸ்மார்ட்ஃபோன்கள் மீதான தள்ளுபடி?


smartphone மீதான சலுகைகளில், google pixel 4A, Iphone 11 pro, Motorola razr 5g, Samsung galaxy f12 மற்றும்  asus RoG phone 3 உள்ளிட்ட பல மாடல்கள் மீதான தள்ளுபடிகளின் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, Asus ROG Phone 3 யின் அசல் விலை ரூ.46,999 ஆக இருக்கும் நிலையில் தள்ளுபடியில் ரூ.41,999க்கு கிடைக்கப்பெறும்.  Samsung Galaxy F12 போனின் அசல் விலை ரூ.10,999 ஆக விற்கப்படும் நிலையில் தள்ளுபடியில் ரூ.9999 ஆக கிடைக்கும். அதே போன்று google pixel 4a வின் அசல் விலை ரூ.29,999 ஆகவுள்ள நிலையில் ரூ.26,999க்கு வாங்க முடியும். மேலும் iQoo 3 ஸ்மார்ட்போனின் விலை ரூபாய் 34ஆயிரத்து 990 என்ற நிலையில் பிளிப்கார்ட் தள்ளுபடியில் ரூ.24 ஆயிரத்து 990 க்கு கிடைக்கப்பெறும். Motorola Razr 5G ஆனது ரூ.89,999 க்கு வாங்க கிடைக்கும் ஆனால்  இதன் அசல் விலை ரூ.1,09,999-ஆக சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது.




இதேபோன்று iphone  வாங்க நினைப்பவர்களுக்கு இந்த தள்ளுபடி ஒரு விருந்தாகவே அமையும் என்றே கூறலாம். குறிப்பாக iphone 11 pro மாடலானது சந்தையில் ரூ.79,999 ஆக விற்பனை செய்யப்படும் நிலையில் தள்ளுபடி சலுகையில் ரூ.74,999 ஆக வாங்க முடியும். Iphone XR மாடலின் விலை 39ஆயிரத்து 999 கிடைக்கப்பெறும். அதே போன்று Iphone SE மாடலானது ரூ.31,999 க்கு விற்பனைக்கு கிடைக்கப்பெறும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபிளிப்கார்டின் big savings days ஸ்மார்ட்ஃபோன்களை தவிர்த்து மின்னணு சாதனங்கள் மற்றும் ஆக்சஸெரீஸ் மீது 80 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. Smartwatch-கள் மீது 60 சதவீதம் வரையும், laptop-களுக்கு 50 சதவீதம் வரையிலும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. குறிப்பாக smart tv களுக்கு 70 சதவீதம் வரை கிடைப்பதால் மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்.




ஃபிளிப்கார்ட் குறிப்பிட்ட கிரேஸி டீல்களை நள்ளிரவு 12, காலை 8 மற்றும் மாலை 4 மணிக்கு என விற்பனை வழங்கவுள்ளது. மேலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் EMI மூலம் பணவரித்தனை செய்பவர்களுக்கு மற்ற சலுகைகளுக்கு மேல் கூடுதலாக10 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.