Financial Deadlines: 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது அல்லது அதார், பான் கார்டை சமர்ப்பிப்பது போன்ற பணிகளை நாளைக்குள் முடிக்க வேண்டும்.


இந்த ஆண்டின் 9வது மாதம் நாளைக்குள் முடிவடைகிறது. இத்தகைய சூழ்நிலையில், நிலுவையில் உள்ள உங்கள் பணிகளை முடிக்க வேண்டும்.  சில பணிகளை நிறைவு செய்ய கடந்த பல மாதங்களாக காலக்கெடு இருந்த நிலையில், தற்போது முடிவடைகிறது. அதாவது, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது அல்லது சிறுசேமிப்பு திட்டங்களில் ஆதார் மற்றும் பான் கார்டை சமர்ப்பிப்பது  போன்ற பணிகளை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் (நாளை) முடிக்க வேண்டும்.  இதில் பல கெடுக்கள் ஏற்கனவே நீட்டிக்கப்பட்டவை இப்போது இந்த மாதம் இறுதியில் முடிவடைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  


2000 ரூபாய் நோட்டுகள்:


புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு, 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டு புழக்கம் நிறுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் 2000 ரூபாய் நோட்டை வைத்திருக்கும் நபர்கள், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் (நாளை) வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல ஹோட்டல்கள், பஸ்கள், ஆம்னி பஸ்கள் போன்ற இடங்களில் 2000 நோட்டுகளை வாங்குவதில்லை. 


ஆதார்-பான் இணைப்பு:


அஞ்சலகக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சிறு சேமிப்பு கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  செப்டம்பர் 30ஆம் தேதிக்குள மக்கள் தங்களது தபால் அலுவலக கணக்குடன் இணைக்கத் தவறினால், தபால் அலுவலக கணக்கு செயலிழக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களின் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு முடக்கப்பட்டால், உங்களால் முதலீடு செய்ய முடியாது. முதலீட்டின் முதிர்வு பலன்களை பெற வாய்ப்பு இருக்காது மேலும், கணக்கில் வட்டி வரவு வைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமிர்த மஹோத்சவ் எஃப்டி:


ஐடிபிஐ வங்கி தனது ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  ஐடிபிஐயின் பிக்சட் டெபாசிட் திட்டம் 375 நாட்கள் FD திட்டமாகும்.   இந்த திட்டத்தின் செல்லுபடி காலத்தை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த திட்டத்தில் 7.10 முதல் 7.65 சதவீதம் வட்டி தரப்பட்டது. சாதாரண குடிமக்களை விட மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம் இத்திட்டத்தில் உள்ளது.


எஸ்பிஐ சிறப்பு எஃப்டி:


பாரத் ஸ்டேட் வங்கி (SBI) மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் முதலீடு செய்ய செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் எஸ்பிஐ மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.