ரூபாய் நோட்டுகளில், சிலர் தங்களது பெயரையும், சிலர் தங்களது காதலர் பெயரையும் விளையாட்டாக எழுதுகின்றனர். மேலும், சிலர் அழியாத மை கொண்டு கிறுக்கல் செய்து விடுகின்றனர்.
இந்திய ரூபாய் செல்லும்:
இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு, அதற்கு செல்லும் என மதிப்பளித்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவாதம் அளிக்கிறது. ரூபாய் நோட்டுகளில் எழுதுவது மற்றும் கிறுக்கல் செய்வது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி என்ன கூறியிருக்கிறது என பார்ப்போம்
ரூபாய் நோட்டுகளில் எழுதுவதால், அந்த பண மதிப்புடைய நோட்டு செல்லாது என ஆகிவிடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், ரூபாய் நோட்டுகளில் எழுத வேண்டாம் என்றும், ரூபாய் நோட்டுகளில் எழுதுவதால் சேதமடையும் தன்மை அதிகரிக்கும் என்றும் கூடிய விரைவில் சேதமடைந்த விடும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
போலி செய்தி:
சமீப காலமாக, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ஒரு போலி தகவலுக்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பு நிறுவனமான பிஐபி ஒரு தகவலை வெளியிட்டது. அதில் ரூபாய் நோட்டுகளில் கிறுக்குவதால் செல்லாது என செய்தி பரவி வருவதாகவும், அது முற்றிலும் தவறு என பிஐபி தெரிவித்துள்ளது.
செய்ய கூடாதவை:
ரூபாய் நோட்டுகளில் இதையெல்லாம் செய்ய வேண்டாம் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- ரூபாய் நோட்டுகளில் பின் குத்த கூடாது
- ரூபாய் நோட்டை வைத்து பொம்மைகள் செய்ய கூடாது, மடிக்க கூடாது.
- ரூபாய் நோட்டுகளில் எழுத கூடாது மற்றும் கிறுக்க கூடாது
நோட்டுகளில் எழுத்துகள் இருக்குமாயின், நீங்கள் வேறு நோட்டு பெற விரும்பினால், அத்தகைய நோட்டுகளை எந்த வங்கிக் கிளையிலும் டெபாசிட் செய்யலாம் அல்லது மாற்றலாம்" என்று ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.
உங்கள் ரூபாய் நோட்டுகள் மண்ணில் சிதைந்திருந்தால், வங்கிகளின் கவுண்டர்களில் இலவசமாக மாற்றி கொள்ளலாம்.
இதன் மூலம், இந்திய ரூபாய் நோட்டுகளில் எழுதியிருந்தால் செல்லும் என்ற தகவல் உறுதிப்படுத்தப்படுகிறது