தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்.ஓ.) அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பம் தாக்கல் செய்ய காலக்கெடு ஜூலை-11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


இ.பி.எஃப்.ஓ. சந்தாதாரர்கள் அதிக ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்ய பரந்த அளவிலான வாய்ப்புகளை வழங்கும் வழகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க ஏற்கனவே மார்ச்,மே மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. பின்னர், ஜூன் 26 -(இன்று) கடைசியாக இருந்தது. பிறகு, இதற்கான கால அவகாசம் ஜூலை - 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதையெடுத்து, தகுதியுடைய உறுப்பினர்கள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.