உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா மோட்டார்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சொந்தக்காரர். அவ்வபோது இவர் பதிவிடும் ட்விட்டர் பதிவுகள் பொருளாதார சந்தையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்திவிடும் . அந்த அளவிற்கு வியாபார யுக்திகளையும் , எதிர்கால பொருளாதார சந்தைகளையும் கணிக்கக்கூடியவர். கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணபரிவர்த்தனயை boom ஆவதற்கும் இவரின் ஒற்றை ட்வீட்தான் காரணம் எனலாம் . இந்நிலையில் அதே ஒற்றை ட்வீட்டால் தனது கிட்டத்தட்ட 5 பில்லியன் (இந்திய மதிப்பில் தோரயமாக 3.72 லட்சம் கோடி ) டெஸ்லா ஷேரை இழந்துள்ளார்.
சமீபத்தில் தான் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 300 பில்லியன் டாலரை தாண்டியது. இதன் மூலம் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை 143 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பின்னுக்கு தள்ளினார். இந்நிலையில் தனது பங்குகளை விற்பது குறித்து எலான் மஸ்க் ட்விட்டரில் கணக்கெடுப்பு நடத்தினார். இதன் காரணமாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு சரிய தொடங்கியது. இதன் காரணமாக இரண்டே நாட்களில் அவர் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்கினை இழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
டெஸ்லா உலகின் நம்பர் ஒன் கார் தயாரிப்பு நிறுவனமாகும், இதன் பங்குச்சந்தை மதிப்பு $1tnக்கும் அதிகமாக உள்ளது.இந்நிலையில்தான் அமெரிக்காவின் சட்ட விதிகளின் படி பெரும் பணக்காரகள் தங்களின் பங்குகளை விற்கும் பொழுதுதான் அரசுக்கு அதிகப்படியான வரி கிடைக்கிறது. இதனால்தான் எலான் மஸ்க் , நான் வரி ஏய்ப்பு செய்து அதன் மூலம் ஆதாயம் பெற விரும்பவில்லை. எனவே எனது பங்குகளில் 10% நான் விற்கலாமா என தனது 63 பில்லியன் ஃபாலோவர்ஸ்டம் வாக்கெடுப்பு கேட்டு, பங்குதாரர்களின் நம்பிக்கையை இழந்து , நஷ்டத்தை சந்தித்துள்ளார்.
வாக்கெடுப்பில் என்ன முடிவு வந்தது என்பதை சொல்லவே இல்லை பாருங்கள் 57.9% பேர் , “சரி விற்றுவிடுங்கள் “ என்றுதான் கூறியுள்ளனர். முன்னதாக அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை தனது விவாகரத்து விவகாரத்தால் 35 பில்லியன் அமெரிக்க டாலர் பங்குகளை இழந்தார். அதனை ஒப்பிடும் பொழுது இது சாதாரணம்தான்.