தனது மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் 4 பில்லியன் டாலர்களை ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளார்.


எலான் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கையகப்படுத்தினார். இந்நிலையில், கார் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 4 பில்லியன் மதிப்புள்ள பங்குகளை அவர் விற்பனைச செய்துள்ளதாக அமெரிக்கப் பங்கு  பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது.


எலான் டுவிட்டரை சொந்தமாக்கிக் கொள்ள டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டரை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார். ஆனால், ட்விட்டர் நிர்வாகத்திடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அந்த முடிவை ஒத்திவைப்பதாக தெரிவித்திருந்தார். 


இதனையடுத்து, ட்விட்டர் தரப்பில் மஸ்க் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான விசாரணை விரைவில் வரவிருந்த நிலையில், ட்விட்டரை முழுவதுமாக எலான் மஸ்க் கையகப்படுத்தினார். அதோடு, ட்விட்டர் தலைமை நிர்வாக அலுவலர் பரக் அக்ரவால், சட்ட நிபுணர் விஜய கட்டே, தலைமை நிதி அதிகாரி நெட் சீகல் உள்ளிட்ட நான்கு பேரை பணி நீக்கம் செய்தார்.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


ட்விட்டரை வாங்குவதாக அறிவித்த பின்னர், அதிலிருந்து பின்வாங்கிவிட்டு தற்போது அதை அவர் கையகப்படுத்தியிருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, இவ்வளவு பெரிய தொகையை அவர் எப்படி செலுத்தினார் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பட்டு வருகின்றன. 


ட்விட்டரில் விரைவில் paywall வசதி? : பயனாளர் பதிவிடும் வீடியோவிற்கு கட்டணங்களை நிர்ணயிக்கலாம்!


அதற்கு பதில் அளிக்கும் விதமாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அமெரிக்க பங்கு சந்தை வங்கிகள் மற்றும் பங்குதாரர்கள் பலரின் உதவியோடு ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் பங்குக்கு ஈடாக புதிய நிறுவனத்தில் தாங்கள் வழங்கிய கடனை மாற்ற அவர்கள் ஒப்புக்கொண்டனர்.


பங்கு சந்தையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ட்விட்டரின் பங்குகள் விற்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் அது நிறுத்தப்பட்டது. இச்சூழலில், அதற்கு புதிய முதலீட்டாளர்கள் கிடைத்துள்ளனர்.


தற்போது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்தும் அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது தெரியவந்துள்ளது.


Mastodon: ட்வீட்டுக்கு பதிலாக டூட்ஸ்.. ட்விட்டரில் இருந்து மாஸ்டடோனுக்கு படையெடுக்கும் நெட்டிசன்ஸ்.. காரணம் என்ன?


மஸ்க் இந்த ஆண்டு டெஸ்லா கார்களுக்காக கிட்டத்தட்ட 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளார். பெரும்பாலும் ட்விட்டர் நிறுவனங்களுக்கு நிதி அளிக்கவே அவர் இவ்வளவு பங்குகளை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. 


கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 8.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பங்குகளையும், ஆகஸ்டில் 6.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பங்குகளையும் அவர் விற்பனை செய்துள்ளார்.