அன்றாடம் பயன்படுத்தும் அத்தியவாசிய பொருளான முட்டை விலை கடந்த சில நாட்களாக பைசா கணக்கில் உயர்ந்து கொண்டே உள்ளது. இன்றைய நிலவரப்படி நேற்றைய விலையிலிருந்து 15 பைசா உயர்ந்து ரூ.4.75 என முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்துள்ளது.
பொதுவாகவே கோடையில் முட்டை உற்பத்தி குறைவாக இருக்கும் என்பதால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என ஒருங்கிணைப்ப குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தை தொடர்ந்து பெரு நகரங்களில் முட்டைக்கான சில்லரை விற்பனை விலையும் அதிகரிக்கும். ஒரு முட்டை 6.30 முதல் 7 ரூபாய் வரை விலை போகலாம். கடந்த 15 நாட்களில் மட்டும் 75 பைசா வரை முட்டையின் விலை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.