அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் இந்த மாதம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ரியஸ் எஸ்டேட் சந்தையில் அவர் களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் டிரம்ப்பின் அமைப்பு, மும்பையில் செயல்பட்டு வரும் டிரிபெகா டெவலப்பர்ஸ் உடன் இணைந்து ரியல் எஸ்டேட் சந்தையில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


மகாராஷ்டிரா மாநிலம், புணேவில் ஏற்கனவே லோதா குரூப் உடன் இணைந்து ரியல் எஸ்டேட் பிராஜெக்ட்டில் டிரம்ப் நிறுவனம் இறங்கியிருக்கிறது.






இதுகுறித்து டிரிபெக்கா டெவலப்பர்ஸ் வெளியிட்ட அறிக்கையில், "இந்த மாதம் டொனால்டு டிரம்ப் ஜூனியர் இந்தியா வர வாய்ப்புள்ளது. டிரிபெக்கா டெவலப்பர்ஸின் 10-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுவதற்காக அவர் வருகை தரவுள்ளார். அப்போது அவர் இந்தியாவில் தொழிலை விரிவுப்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.


டிரம்ப் டவர் டெல்லி, டிரம்ப் டவர் கொல்கத்தா, டிரம்ப் டவர் புணே, டிரம்ப் டவர் மும்பை என 4 திட்டங்கள் இந்தியாவில் தற்போது கைவசம் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு நம்பவரில் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் 140 அல்ட்ரா டீலக்ஸ் அப்பார்ட்மென்ட்களை கொண்ட டிரம்ப் டவர் திட்டம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.