இந்தியர்களுக்கு நகை வாங்குவது மிகவும் விருப்பமான விஷயங்களில் ஒன்றாகும். ஆண்கள், பெண்கள் என அவரவர்க்கு பிடித்த மாதிரி தங்கத்தை அணிவதும், நகைகளை சேமிப்பாக வைப்பதும், இந்திய குடும்பங்களில் உண்டு. இப்போது ஊரடங்கின் போது , நகைகளை வாங்குவது குறைந்து வரும் நிலையில் , இப்போது, டிஜிட்டல் தங்கம் அறிமுகமாகிறது.


நகை கடைகளுக்கு செல்வது, தங்கத்தை நேரில் சென்று வாங்க தயங்கும் நிலையில், ஆன்லைனில் தங்கம் வாங்குவது, முதலீட்டாளர்களுக்கு சரியான தீர்வாக உள்ளது. டிஜிட்டல் தங்க வர்த்தகர், ஆக்மொன்ட் கோல்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் 40-50% வணிகம்  அதிகரித்துள்ளது.டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு அவற்றை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.


முதலீடு செய்வதற்கு வழிமுறைகள்


வரலாற்று ரீதியாக பார்க்கையில், தங்க நாணயங்கள், தங்க நகைகள் வாங்குவது, தான் பழக்கமாக இருக்கும். மேலும், தங்க பரஸ்பர நிதிகள், தங்க பாத்திரங்கள் என பல வகைகள் உள்ளது. இந்த பெருந்தொற்று நேரத்தில், டிஜிட்டல் தங்கம் பிரபலமாகி வருகிறது.




டிஜிட்டல் தங்கம் என்றால் என்ன?


தங்கத்தை நேரில் வாங்குவது, சில பிரச்சனைகளை கொண்டுள்ளது. தங்கத்தின் தூய்மை தன்மை பற்றி ஆராய்வதும், அவற்றை பத்திரமாக வைப்பதும், சிரமம். டிஜிட்டல் தங்கம் ஆன்லைனில்  வாங்கலாம். வாடிக்கையாளர் சார்பாக விற்பனையாளர் காப்பீடு செய்து வால்ட்களில் சேமிக்கப்படுகிறது. மொபைல் இருந்தால் போதும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.


எப்படி முதலீடு செய்வது ?


Paytm, Google Pay மற்றும் PhonePe மூலம் டிஜிட்டல் தங்கம் முதலீடு செய்யலாம். இந்தியாவில் டிஜிட்டல் தங்கத்தை விற்கும் மூன்று நிறுவனங்கள் உள்ளன-



  1. ஆக்மண்ட் கோல்ட் லிமிடெட்.

  2. எம்.எம்.டி.சி-பாம்ப் இந்தியா பிரைவேட் லிமிடெட், அரசு நடத்தும் எம்எம்டிசி லிமிடெட் மற்றும் சுவிஸ் நிறுவனமான எம்.கே.எஸ் பாம்ப் இடையே ஒரு கூட்டு முயற்சி.

  3. டிஜிட்டல் கோல்ட் இந்தியா பிரைவேட் / லிமிடெட் அதன் சேஃப் கோல்ட் பிராண்டுடன்.


டிஜிட்டல் தங்கத்தில் வர்த்தகம் செய்வது எப்படி?


க்ரோவ், பேடிஎம், எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ், ஜி-பே, மோட்டிலால் ஓஸ்வால் போன்ற டிஜிட்டல் தங்க முதலீடுகளை வழங்கும் தளங்களை பார்வையிடுங்கள்


பின்னர் அவர்களின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கவனமாக படியுங்கள்


1.உங்கள் பணத்தை முதலீடு செய்து அன்றைய தினத்தில் தங்க விலைக்கு ஏற்ப தங்கத்தை வாங்கலாம்.


2.KYC செயல்முறை  முடித்த பின், பணத்தை செலுத்தும் முறையை தேர்வு செய்யலாம்.


3.தங்கத்தை பாதுகாக்க லாக்கரை தேர்வு செய்யலாம். 24/7 நீங்கள் அதை பயன்படுத்தி கொள்ளலாம் .



  1. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். அதே தளத்தில் டிஜிட்டல் முறையில் விளம்பர படுத்தி விற்கலாம்.


5.தங்கத்தை விற்க வேண்டாம் என  செய்தால், உங்கள் வீட்டு முகவரிக்கு கொண்டு தங்கம் வந்துவிடும்.


ஊரடங்கு நேரத்தில் தங்கத்தின் விலை 33% உயர்ந்துள்ளது.


1 ஜனவரி 2020 அன்று விலை: ரூ .39,100


28 அக்டோபர் 2020 நிலவரப்படி: ரூ .52,300


டிஜிட்டல் முறையில் தங்கம் முதலீடு செய்வதின் நன்மைகள்



  1. மிகவும் குறைந்த 1 ரூபாய்லிருந்து முதலீடு செய்யலாம்.


2.ஆன்லைன் கடன் பெறவும் இந்த ஆன்லைன் தங்கத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.



  1. 24கேரட் தங்கம். மிகவும் தூய்மையானது.

  2. 100%பாதுகாப்பாக சேமிக்கப்படுகிறது.


5.டிஜிட்டல் முறையில் பரிமாறி கொள்ளலாம்


டிஜிட்டல் முறையில் தங்கம் முதலீடு செய்வதின் தீமைகள்


1.ரூபாய்.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.


2.ரிசர்வ் வங்கி அல்லது செபி அரசாங்க ஒழுங்குமுறை இல்லாதது.


3.டெலிவரி மற்றும் தங்கத்தின் தயாரிப்பு சேர்த்து கொள்ளப்படுகிறது.


4.ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே சேமிக்க முடியும். பின்னர் அவற்றை விற்க வேண்டும்.