வங்கிகள் செயலிழந்தால் டெபாசிட்தாரர்களுக்கு டெபாசிட் திரும்ப வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, டெல்லியில் வங்கி டெபாசிட் காப்பீட்டு நிகழ்வில் பேசிய அவர்,நம் நாட்டில் வங்கி வைப்பாளர்களுக்கான காப்பீடு 1960 களில் உருவாக்கப்பட்டது. முன்பு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் ரூ.1000 வரை மட்டுமே இருந்த நிலையில், பின்னர் ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் கவலையை உணர்ந்து, இந்தத் தொகையை ரூ. மீண்டும் 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்றார். 






கடந்த சில நாட்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டெபாசிட்தாரர்கள், பல ஆண்டுகளாக பணத்தை திரும்ப பெறவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துவருகிறது. கடந்த நிதியாண்டின் இறுதியில் முழுமையாக பாதுகாக்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை மொத்த கணக்குகளின் எண்ணிக்கையில் 98.1 சதவீதமாக இருந்தது. 


இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 16 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் டெபாசிட் தாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளும், வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகம் சமீபத்தில் இடைக்கால நிதிக்கான முதல் தவணையை வழங்குகிறது. நாட்டின் செழிப்பில் வங்கிகளுக்கு பெரும் பங்கு உள்ளது. வங்கிகளின் செழிப்புக்கு, டெபாசிட்டர்களின் பணத்தைப் பாதுகாப்பது போலவே, வங்கிகளைக் காப்பாற்ற வேண்டுமானால், டெபாசிட்டர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான டெபாசிட் தாரர்களின் மாற்று வங்கிக் கணக்குகளுக்கு அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப ரூ.1300 கோடிக்கு மேல் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 






மேலும், சிறிய வங்கிகளின் திறன் மற்றும் வெளிப்படை தன்மையை அதிகரிக்கவே பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் போது டெபாசிட்டர்களின் நம்பிக்கையை பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் மேம்படுத்தப்பட்ட நிதி அமைப்பு மற்றும் பல்வேறு சீர்திருத்தங்கள் கடந்த 7 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஏழை மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம், எனவே வைப்புத்தொகையை அதிகரித்துள்ளோம். எந்தவொரு வங்கியும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டால், அதிகரிக்கப்பட்ட தொகை அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை தரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண